விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஞானம் கனிந்த நலங்கொண்டு*  நாள்தொறும் நைபவர்க்கு- 
  வானம் கொடுப்பது மாதவன்*  வல்வினையேன் மனத்தில்-
  ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு* அத்- 
  தானம் கொடுப்பது*  தன் தகவென்னும் சரண் கொடுத்தே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாதவன் - திருமால்;
வானம் கொடுப்பது - மோக்ஷம் அளிப்பது;
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன் - மஹாபாபியான எனது ஹ்ருதயத்திலிருறந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார்;
தன்னை எய்தினர்க்கு - தம்மைப் பற்றினவர்களுக்கு;
அத்தானம் கொடுப்பது - அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது;

விளக்க உரை

“அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா”, என்று கூறும்படி, பெரியபிராட்டியுடன் இணைந்தே சேதனர்களைக் கைக்கொள்ளும் ஸர்வேச்வரன், தனது உயர்ந்த இடமாகிய பரமபதத்தை யாருக்கு அளிக்கிறான் என்றால் – சிறந்த ஞானம் கொண்டு பக்தி உடையவர்களாகவும், அந்தப் பக்தி காரணமாக நாள் முழுவதும் அவனை எண்ணியபடி கைங்கர்யம் செய்பவர்களுக்கே ஆகும். இப்படி உள்ளபோது உடையவர் செய்தது என்ன? மிகவும் தீய பாவங்கள் பலவும் செய்தபடி உள்ள எனது மனதில் இருந்த பாவங்கள் செய்யும் எண்ணங்களை அடியுடன் நீக்கினார். இதன் மூலம் பரமபதம் கிட்டும்படிச் செய்தார். இதுவே அவரது கருணை மூலமாக, அவர் நமக்குச் செய்யும் உபாயமாகும்.

English Translation

For those who offer worship everyday with a heart mellowed by knowledge the Lord Madavan grants the sky world of Maksha. Ramanuja, who remvoed the inadequacies of my heart, gives that same position to those who approach him, through compassion for the refuge-seekers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்