விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண் தரு மாறன் பசுந்தமிழ்*  ஆனந்தம் பாய்மதமாய்- 
    விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம்*  மெய்ம்மை-
    கொண்ட நல் வேதக் கொழுந்தண்டமேந்திக்* குவலயத்தே- 
    மண்டி வந்தேன்றது*  வாதியர்காள்! உங்கள் வாழ்வற்றதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாறன் - நம்மாழ்வார்;
பண் - இசைகளாலே;
தரு - அருளிச்செய்த;
பசுந்தமிழ் ஆனந்தம் - செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்;
பாய்மதம் ஆய்விண்டிட - பெருகுமதநீராக ஒழுகப்பெற்று;

விளக்க உரை

தன்னை அண்டியவர்களைக் காப்பாற்றும் தன்மை உடையதும், தான் விரும்பியவர்களுக்கு மாலை சூடி அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கும் திறனுள்ளதும் ஆகிய யானை போன்று எங்கள் எம்பெருமானார் உள்ளார். இத்தகைய யானையின் மதநீராக வழிவது எது என்றால் – நம்மாழ்வார் அருளிச்செய்த, அழகான பண்களுடன் கூடிய, தெளிவான தமிழில் உள்ள திருவாய்மொழி ஆகும். இத்தகைய திருவாய்மொழி என்னும் மதநீர் எங்கும் பரவி ஓடும்படி யானையாகிய எம்பெருமானார் வந்தார். இந்த யானையின் தந்தமாக எது உள்ளது என்றால் – (தந்தம் = உடையவர் திருக்கரத்தில் உள்ள த்ரிதண்டம் என்றும் கூறலாம்) ஸத்யமே வடிவமாக உள்ளதும், மிகுந்த பெருமை உள்ளதும் ஆகிய வேதங்கள் ஆகும். அல்லது நம்மாழ்வாரின் தமிழ் வேதமாகிய திருவாய்மொழியைக் கூறியதாகவும் கொள்ளலாம். அல்லது பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதம் என்பதற்கு – ஸ்ரீமந் நாராயணன் என்னும் கடலில் இருந்து, ஆழ்வாராகிய மேகமானது கருணை என்னும் நீரை பருகி எடுத்தது; அதனை பெரியநம்பி என்னும் குன்றில் பெய்விக்க, அங்கிருந்து அந்தக் கருணையானது வழிந்து, மணக்கால்நம்பி – உய்யக்கொண்டார் – ஆளவந்தார் என்னும் ஆறுகளில் பாய்ந்து, எம்பெருமானார் என்னும் குளத்தை அடைந்து, ஸம்ஸாரிகளைக் காத்தது – என்று பொருள் கொள்ளலாம். இப்படிப்பட்ட த்ரிதண்டம் ஏந்திய இவர் செய்வது என்ன? யானையாக வந்து வேதங்களை மறுத்துக் கூறுபவர்களை மிதித்தும், தனது தந்தம் கொண்டு குத்தியும் ஓடச் செய்கிறார் என்று கருத்து. ஸர்வேச்வரன் எப்போதும் தனது திருக்கரங்களில் சங்கும் சக்கரமும் கொண்டது போன்று, எம்பெருமானார் எப்போதும் த்ரிதண்டத்துடன் உள்ளார். இப்படிப்பட்ட யானை இந்த பூமியில் உள்ள ஹிமாசலம், வேங்கடாசலம், சாரதாபீடம் ஆகிய இடங்களுக்கு வந்து, வாதம் செய்தவர்களைத் தள்ளியபடி நின்றது. எம்பெருமானாரின் வாதங்களை எதிர்த்து வாதம் செய்பவர்களே! உங்கள் வாழ்வு இத்துடன் முடிந்தது.

English Translation

O Polemics! Watch out! The rutted elephant called Ramanuja, -with the ichor of the sweet Pann-based Maran's Tamil Tiruvaimoli and the hefty tusks of Vedic truths, -is running amuch everywhere. Your lives are ended.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்