விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிடியைத் தொடரும் களிறென்ன*  யான் உன் பிறங்கிசீர்- 
    அடியைத் தொடரும் படி நல்க வேண்டும்*  அறுசமயச்-
    செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து*  இப்- 
    படியைத் தொடரும்*  இராமாநுச! மிக்க பண்டிதனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வந்து இப்படியை தொடரும் - இப்பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற;
மிக்க பண்டிதன் - மஹாபண்டிதரான;
இராமாநுச - எம்பெருமானாரே;
பிடியை தொடரும் களிறு என்னயான் - யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண்யானை போல;
யான் - அடியேன்;

விளக்க உரை

வேதங்களை மறுக்கும் ஆறு மதங்களைப் பின்பற்றுபவர்கள், அந்த முள் நிறைந்த செடிகளை அண்டி இருப்பவர்கள் கண்டவுடன் பயந்து ஓடும்படியா, இந்தப் பூமியில் பரமபதத்திலிருந்து வந்து திருஅவதாரம் செய்த எம்பெருமானாரே! (ஆறு என்ற பதம் மூலம் – ஆட்டின் தலையை வெட்டிப் பலி கொடுத்தல், முள் நிறைந்த காட்டில் பஞ்ச அக்னி எழுப்பி கோரமான தவம் புரிதல், பாஷாண்டி வேடம் பூண்டபடி இருத்தல் முதலானவற்றையும் கூறுவதாகக் கொள்ளலாம்). உடையவரே! உம்முடைய ஞானம் எத்தகையது! எனக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது. அது என்னவென்றால் – பெண் யானையைத் தொடரும் ஆண் யானையைப் போன்று, இத்தனை ஆண்டுகளாக நான் உலகவிஷயங்களின் பின் மட்டுமே சென்றபடி இருந்தேன். இவ்விதம் திரிந்த நான் இனி வரும் காலங்களில், இந்த உலகம் முழுவதும் நிரம்பிய புகழ் கொண்ட உன்னுடைய திருவடிகளை மட்டுமே, ஒருபோதும் நழுவாமல் அண்டி நிற்கவேண்டும். இப்படிப்பட்ட குணத்தை நீவிர் எனக்கு அருள வேண்டும்

English Translation

O Ramanuja, Great scholar! Those who swear by the heretic six schools of blinding thought run helter-skelter as you follow them on Earth! Bless that I may follow you radiant lotus feel like an elephant but follows a cow.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்