விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன,*  நாரணனைக்- 
  காட்டிய வேதம் களிப்புற்றது,*  தென் குருகைவள்ளல்-
  வாட்டம்இலா வண் தமிழ்மறை வாழ்ந்தது*  மண்ணுலகில்- 
  ஈட்டிய சீலத்து*  இராமாநுசன் தன் இயல்வுகண்டே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

களிப்பு உற்றது - (நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன;
தென் குருகை வள்ளல் - அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த);
வாட்டம் இலா - ஒரு குறையுமற்ற;
வண் தமிழ் மறை - சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி;
வாழ்ந்தது - வாழ்வு பெற்றது.;

விளக்க உரை

அறியாமையின் இடமாக உள்ள இந்தப் பூமியில், தான் பெற்றிருந்த பரமபதத்தை விடுத்து, இந்த உலகினரின் சிறுமையைக் பாராமல் எம்பெருமானார் அவதரித்தார். இவரது ஸ்வபாவம் மற்றும் உயர்ந்த குணங்களைக் கண்டு, சூரியனைக் கண்ட இருள் விலகுவது போன்று, வைதிகம் அற்ற மதங்கள் அனைத்தும் நிர்மூலமாகச் சென்றன. இவரது அவதாரம் ஏற்பட்ட பின்னர் ஸர்வேச்வரனாகிய நாராயணனப் போற்றும் வேதங்கள் அனைத்தும், “நமக்கு இனி குறையில்லை”, என்று கர்வம் அடைந்தன. மிகவும் உயர்ந்த இடமும், நம்மாழ்வாரின் அவதார இடமும் ஆகிய ஆழ்வார்திருநகரியில் உதித்த நம்மாழ்வார் அருளிச் செய்ததும், அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும், தமிழ் வேதமும் ஆகிய திருவாய்மொழி எந்தக் குறையும் இன்றி வளர்ந்தது.

English Translation

On seeing the essence of goodness in Ramanuja's philosophy, all the lowly heretic thoughts withered. The Vedic truth of Narayana rejoiced. The peerless fragrant Tamil Vedas of Southern Kurugur Saint gained a new life.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்