விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நிகரின்றி நின்ற என் நீசதைக்கு*  உன் அருளின்கண் அன்றிப்-
  புகல் ஒன்றும்இல்லை*  அருட்கும் அஃதேபுகல்*  புன்மையிலோர்-
  பகரும் பெருமை இராமானுச!  இனி நாம்பழுதே*
  அகலும் பொருள்என்*  பயன் இருவோமுக்கும் ஆனபின்னே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நிகர்இன்றி நின்ற என்நீசதைக்கு - என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு;
நின் அருளின் கண் அன்றி - தேவரீருடைய க்ருபையினிடத்தில் தவிர;
புகல் ஒன்றும் இல்லை  - வேறு எவ்விடத்திலும் ஒதுங்க இடமில்லை
அருட்கும் - தேவரீருடைய அந்த க்ருபைக்கும்;
அஃதே புகல் - (என் போல்வாருடைய) அந்தத்தாழ்மையே சரணம்; (ஆக இவ்வகையாலே);

விளக்க உரை

ஆத்மகுணங்கள் (மிகவும் உயர்ந்த குணங்கள் எனலாம்) உள்ளவர்கள், அனாத்ம குணங்கள் (தாழ்ந்த குணங்கள் எனலாம்) உள்ளவர்கள் என்று இந்த உலகில் உள்ளவர்களைத் தனித்தனியே பிரித்து ஆராய்ந்தால், என்னைப் போன்று ஆத்மகுணங்கள் முற்றிலும் அற்றவன், அனாத்ம குணங்கள் பரிபூர்ணமாக உள்ளவன் வேறு யாரும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட தாழ்ந்தவனான எனக்கு உமது கருணை அல்லாமல் வேறு புகலிடம் இல்லை. சேஷபூதன் (அடிமை) ஒருவனின் குற்றங்கள் அனைத்திலும் சேஷியின் (எஜமானன்) குணங்கள் புகும் தன்மை போன்று, எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்கள் உள்ளன. இவரது குணங்கள் அனைத்தும் எனது தோஷங்களில் புகலிடம் தேடி வந்தன – காரணம், தோஷம் அற்றவர்களுக்கு இவரது குணங்கள் பயன்படாது; அவை என் போன்று பலவிதமான குற்றங்கள் செய்பவர்களுக்கு மட்டுமே, அவர்களைத் திருத்துவதற்காகக் பயன்படும். ஆக இவரது குணங்களுக்கு எனது தோஷங்கள் புகலிடமாக இருந்தன. இப்படியாக் எம்பெருமானாரின் குனங்கள் வந்து தங்கும் பாத்திரமாக நான் அவருக்குப் பெரும் பேறாக அமைந்துவிட்டேன். ஸம்ஸாரம் என்ற பிடியில் சிக்காமல் கரை ஏறிய முக்தர்கள, நித்யஸூரிகள் ஆகியவர்களால் பெருமையாகப் போற்றப்படும் எம்பெருமானாரே! இவ்விதமாக நாம் ஒருவருக்கு ஒருவர் பயனுள்ளவர்களாக உள்ளோம். இப்படி உள்ளபோது, இனி உள்ள காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் பிரிவதற்குக் காரணம் ஏதேனும் உண்டாகுமோ? (உண்டாகாது)

English Translation

O Ramanuja praised by faultless ones! My incomparable lowliness has not refuge but your grace. Your grace too can flow nowhere except into me. When the two thus find their mutual fruition, is if not futile to separate them?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்