- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சரணம் புக ஏற்றவனாகவும், அனைத்து ஆத்மாக்களின் தலைவனாகவும், அனைத்திற்கும் ஸ்வாமியாக உள்ளவனும் யார் என்றால், திருவரங்கத்தில் கண்வளரும் பெரியபெருமாள் என்ற திருவரங்கச்செல்வனே ஆவான் – என்று, இப்படியாக இருள்தருமா ஞாலத்தில் உள்ள மக்களுக்கு உயர்ந்த உபாயத்தை எம்பெருமானார் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட உயர்ந்த தர்மத்தை இந்த உலக மக்களின் சுக-துக்கம் ஆகியவற்றைத் தன்னுடையதாகவே கொள்ளும் உறவினன் போன்ற எம்பெருமானார் உபதேசித்தார். இவர் எனக்குச் செய்த உதவி என்ன என்றால் – எத்தனை அனுபவித்தாலும், எத்தனை ப்ராயச்சித்தம் செய்தாலும் கழியாமல் எனது வினைப்பயன்கள் இருந்தன; அவற்றை அழித்தார்; அவை மீண்டும் என்னை அண்டிவிடாமல் தடுக்க, இரவு-பகல் பாராமல் இடைவிடாமல் எனது இதயத்தில் நிலையாக வீற்றிருந்தார். இத்தகைய இவரது வாத்ஸல்ய குணத்திற்கு ஈடில்லாமல் இருந்தார். இவ்விதம் எம்பெருமானாரை அடைந்துவிட்ட எனக்கு, இந்த உலகில் நிகரானவர்கள் யாரும் இல்லை.
English Translation
Our masterly Ramanuja convinced the world that the lord Ranganatha is the only one worthy of worship as the lor of Universe Breaking through my strong Karmas, he entered my heart night and day as one without a peer, Now who in the world can match me?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்