விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆயிழையார் கொங்கை தங்கும்*  அக் காதல்  அளற்றழுந்தி-
    மாயும் என் ஆவியை*  வந்தெடுத்தான் இன்று*  மாமலராள்-
    நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன்*  அரங்கனென்னும்- 
    தூயவன்*  தீதில் இராமானுசன் தொல்ல‌ருள் சுரந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா மலராள் நாயகன் - லக்ஷ்மீபதியான;
அரங்கன் - பெரிய பெருமாள்;
எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும் - ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும்;
தூயவன் - பரமபரிசுத்தரும்;
தீது இல் - எவ்வகைக் குற்றமுமில்லாத தவருமான;

விளக்க உரை

தங்கள் உடலில் உள்ள குற்றம் குறைகள் தெரியாதபடி மறைத்து உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த பெண்களின் ஸ்தனங்களில் எனது ஆத்மாவை ஈடுபடுத்தியபடியே இருந்தேன். அப்போது எம்பெருமானார் செய்தது என்னவெனில் – அனைத்து மலர்களிலும் உயர்ந்த தமர் மலரில் வாசம் செய்யும் பெரியபிராட்டியின் நாயகனாக உள்ளவனும், திருவரங்க மாநகரில் கண்வளர்பவனும் ஆகிய பெரியபெருமாளே அனைத்து உயிர்களின் எஜமானன் என்று உபதேசம் செய்தார். இப்படிப்பட்ட உபதேசம் செய்தவரும், தோஷங்கள் அற்றவரும், தூய்மையானவரும் ஆகிய எம்பெருமானார், இந்த உலகிற்கு வந்து அவருடைய இயல்பான கருணையை அனைவருக்கும் சுரந்தார்.

English Translation

The pure faultless Ramanuja fought that Arangan, the lord of lotus dame Lakshmi is the husband of all souls. Through boundless grace, he pulled me out of quagmire of love for women's breasts, and saved me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்