- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
முன்பு பகவான் பல சிறந்த அர்த்தங்களை ஸ்ரீ பகவத் கீதாமுகத்தாலே வெளிப்படுத்தின வளவிலும் பாழும் ஸம்ஸாரிகள் அவ்வர்தங்களைத் தெரிந்துகொண்டு உஜ்ஜீவிக்க மாட்டாமல் மேன்மேலும் ஸம்ஸாரத்தையே பெருக்கிக்கொண்டு அதோகதியை யடைந்துவிடவே, “ஐயோ! இப்படி நிந்ய ஸம் ஸாரிகளாய்க் கெட்டுப்போகிறார்களே!” என்று அநுதாபங்கொண்ட எம்பெருமானார் அந்த கீதாசாஸ்த் ரத்திலுள்ள பொருள்களையே விளங்க உரைத்துக் கொண்டு, இது கேட்டுத் திருந்துவார் ஆரேணு முண்டோ? என்று ஸம்ஸாரிகளைப் பின்தொடர்ந்து செல்லுகிறார்; நம்மைப் பெறுகற்கு அவர் தாமே முயற்சி செய்துகொண்டு - ஆள்பார்த்து உழிதருகின்றார்; இந்தக் திருக்குணம் உங்களுக்குப் தெரிய வில்லையா? என்கிறார். தானும் அவ்வொண் பொருள் கொண்டு = கீதா பாஷ்யம் அருளிச் செய்து என்று கருத்து திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே சரமச்லோகார்த்தத்தை ஏகாந்தமாகக் கேட்டு அதனை யெல்லாரு மறிந்து உஜ்ஜீவிக்குமாறு கோபுரத்தின் மேலேறி விளம்பரப்படுத்தின திருக்குணத்தை இப்பாட்டில் பேசுகின்றாரென்னவுமாம்.
உரை:2
முதலையால் பீடிக்கப்பட்ட கஜேந்திரனையும், அச்வத்தாமனின் ப்ரஹ்மாஸ்திரத்தில் இருந்து பரீக்ஷத்தையும் காத்த அழகான சக்கரம் ஏந்தியவன்; அனைத்து உயிர்களின் நாயகன் – இப்படிப்பட்ட வாஸுதேவன் செய்தது என்ன? ஸமுத்திரத்தில் மறைந்து கிடந்த இரத்தினக் கற்களை வெளியெடுத்தது போன்று வேதங்கள் என்னும் கடலில் உள்ள ஆழ்பொருள்களை கீதாசாஸ்திரமாக அனைத்து ஜீவன்களும் உய்யும்படி வெளிப்படுத்தினான். ஆனால் இந்த உயர்ந்த சாஸ்திரத்தைப் பின்பற்றாமல், கலியுகத்தில் ஸம்ஸாரம் என்னும் பிடியில் இந்த உலகம் சிக்கித் துன்பப்படுவதைக் கண்டு எம்பெருமானாரின் இளகிய மனம் பொறுக்கவில்லை. எனவே அந்த சாஸ்திரத்தின் மெய்ப்பொருளை திருக்கோட்டியூர் நம்பியிடம் கற்றுத் தெளிந்து, தானும் அந்தச் சாஸ்திரத்திற்குப் பாஷ்யம் அருளிச்செய்தார். இதனை அனைவருக்கும் உபதேசித்து, அதனைப் பின்பற்றுபவர்களை இன்றளவும் தொடர்ந்து வரும் உயர்ந்த குணம், நம்முடைய உடையவரின் திருக்குணம் ஆகும்
English Translation
Then in the yore, the lord of all souls, wielder of the discus, brought out the hidden meaning of Vedic texts to Arjuna. Even then, seeing the impatient worldly ones trapped in despair, the lord followed ones trapped in despair, the lord's followed them with good advice. That is how our Ramanuja came to be!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்