விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நிலத்தைச்  செறுத்துண்ணும்  நீசக் கலியை,*  நினைப்ப‌ரிய- 
  ப‌லத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,*  என் பெய்வினைதென்- 
  புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்* 
  நலத்தைப் பொறுத்தது*  இராமானுசன் தன் நயப்புகழே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் பெய் வினை - என்னாலே செய்யப்பட்ட பாவங்களை;
தென் புலத்தில் - யமலோகத்தில்;
பொறித்த - எழுதிவைத்த;
அப் புத்தகம் சும்மை - அந்த புஸ்தகக் கட்டுகளை;
பொறுக்கிய பின் - கொளுத்திவிட்டபின்பு;
 

விளக்க உரை

தர்மம், அர்த்தம், காமம் (அறம், பொருள், இன்பம்) மற்றும் மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்கள் ஏற்படுவதற்கு இடமாக உள்ளது இந்தப் பூமியாகும். இந்தப் பூமியில் உள்ள மனிதர்களை மயங்க வைக்கும்; அவர்களுக்குத் துயரமும் ஏற்படவைக்கும்; மனிதர்களில் சண்டாளர்கள் போன்று, யுகங்களில் தாழ்வானது; மனதால் ஸர்வேச்வரனின் வலிமையைக்கூட அறிந்து கொள்ளலாம், ஆனால் இதன் வலிமையை அறிய இயலாது – இப்படிப்பட்ட தன்மைகள் உடையது எது என்றால் கலிகாலமாகும். சூரியன் உதயம் ஆனவுடன் இருள் விலகியது போன்று, எம்பெருமானார் திருஅவதாரம் செய்தவுடன் இந்தக் கலியின் தோஷம் விலகியது. இவ்விதமாக எம்பெருமானார் இந்த உலகைக் காப்பாற்றினார். இவ்விதம் மிகவும் உயர்வான செயல்கள் செய்த பின்னரும் எம்பெருமானாரின் உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் பிரகாசம் அடையவில்லை. பின்னர் வேறு எதன் மூலம் பிரகாசம் அடைந்தது? பல ஆண்டுகளாக நான் இயற்றி வந்த பாவங்கள் அனைத்தும், தெற்குத் திசையை இருப்பிடமாக உடைய யமலோகத்தில் சித்திரகுப்தனால் அவன் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பாவங்களையும், அந்தச் சுவடிகளையும் எம்பெருமானார் அழித்தார். அதன் பின்னரே அவரது குணங்கள் பிரகாசம் பெற்றன.

English Translation

Even after the terrible Kali's pervasive influence of unimaginable strength was destroyed. Ramanajua's greatness did not become apparent; but when the account books of my post sins, maintained in Hell's office were destroyed, his greatness shone like the sun.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்