விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொள்ளக் குறைவு அற்று இலங்கி*  கொழுந்து விட்டு ஓங்கிய உன் 
  வள்ளல் தனத்தினால்*  வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்* 
  வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று* 
  தள்ளுற்று இரங்கும்*  இராமாநுச! என் தனி நெஞ்சமே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெள்ளை - பரிசுத்தமாய்;
சுடர் விடும் - பரிசுத்தமாய் விளங்காநின்றுள்ள;
உன் பெரு மேன்மைக்கு - தேவரீருடைய ப்ரபாவத்திற்கு;
இழுக்கு என்று - அவத்யாவஹம் என்று;
என் தனி நெஞ்சம் - எனது துணையற்ற நெஞ்சானது;
 

விளக்க உரை

 எம்பெருமானாரே! உன்னுடைய ஔதார்யம் என்ற வள்ளல் தன்மை எப்படி உள்ளது என்றால் – அன்றாடம் மேகங்கள் நீரை எடுத்தாலும் குறையாமல் உள்ள ஸமுத்திரம் போன்று, அள்ளஅள்ளக் குறையாமல் உள்ளது; ஆனால் அந்தக் கடல் போன்று, அதே அளவில் இல்லாமல் மேன்மேலும் ப்ரகாசம் அடைவது உனது வள்ளல் தன்மை ஆகும். வள்ளல் என்று கூற என்ன காரணம் உள்ளது? இந்த உலகில் உள்ள அனைவருக்கும் பகவானின் ஸ்வரூபம், ரூபம் பற்றி உபதேசம் செய்து, “இவ்விதம் செய்து விட்டோம், இது போதும்”, என்று எண்ணாமல், அனைவரும் அனைத்துக் காலத்திலும் உய்யும் விதமாக ஸ்ரீபாஷ்யம் மற்றும் கீதா பாஷ்யம் போன்றவற்றை அருளிச்செய்து வைத்தார். சிபிச்சக்ரவர்த்தி போன்றவர்களும் வள்ளல் எனப்படுகிறார்களே என்ற கேள்வி எழலாம். அவர்கள், ஏழைகளாக வந்தால் அழியக்கூடிய செல்வத்தைப் பரிசாக அளிக்கவல்லவர்களாக இருந்தனர்; நீயோ வந்தவர்களின் நிலை பாராமல், வேறு கதி இல்லை என்று வந்தால், உயர்ந்த மோக்ஷ உபாயத்தையே பரிசாக அளிக்க வல்லவர் அல்லவோ? நான் அழியும்படியாகவே (எனது மனசாட்சிக்குத் தெரிந்தே) பல பாவங்களை இயற்றியபடி இருந்தேன். இப்படிப்பட்ட பாவியான எனது மனதில், பரமபதத்தின் நாயகனால் கௌரவிக்கப்பட்ட நீ புகுந்தாய். உனது உயர்வு எங்கே, பாவியான நான் எங்கே? இது சேர இயலாத தொடர்பாக அல்லவா உள்ளது? இந்த உலகின் சிரமங்களைத் தனது குளிர்ந்த ஒளியால் ஆற்றவல்ல சந்திரனுக்குக் கூட களங்கம் உண்டு. ஆனால் பகவத் கடாக்ஷம் முழுமையாகப் பெற்ற உனக்கு, உன்னுடைய தேஜஸ்ஸுக்கு எந்தவிதமான களங்கமும் இல்லாமல் உள்ளவரே! கூரத்தாழ்வானைக் கொண்டு என்னை நல்வழிப்படுத்தி, அரங்கனுக்கே அடிமையாகும்படி அருளியதால், உனக்கு இந்தக் களங்கமற்ற தேஜஸ் உள்ளது போலும். வெண்மையான சுடர் போன்று எந்தவிதமான களங்கமும் அற்ற நீவிர் என் நெஞ்சில் புகுந்ததால், உனது மேன்மைக்கு இழுக்கு ஏற்பட்டுவிடும் என்று அறிந்து எனது நெஞ்சம் தவித்தபடி உள்ளது.

English Translation

O Ramanuja! With a grace never disminishing in radiance but ever increasing in power, your dark-cloud like benevolence has entered and captivated my heart. The silver lining on your greatness is not a blemish, yet I fear it in my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்