விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வைப்பாய வான்பொருள் என்று,*  நல்லன்பர்  மனத்தகத்தே- 
  எப்போதும் வைக்கும் இராமானுசனை*  இருநிலத்தில்- 
  ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில்வைத்து* 
  முப்போதும் வாழ்த்துவன்*  என்னாம்  இதுஅவன் மொய்புகழ்க்கே!      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நல் அன்பர் - விலக்ஷண பக்தியுடையவர்கள்;
வைப்பு ஆய வான் பொருள் என்று - “எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத்ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு;
இராமாநுசனை - எம்பெருமானாரை;
இரு நிலத்தில் - இந்தப்பெரியவுலகத்திலே;
ஒப்பார் இலாத உறு வினையேன் - ஒப்பற்ற மஹாபாபியான அடியேன்;

விளக்க உரை

ஆபத்துக் காலத்தில் உதவுவதற்காகச் சேர்த்து வைக்கப்பட்ட மிகவும் உயர்ந்த பெருமையுடைய தனம் எம்பெருமானார் ஆவார். வைத்தமாதியாக உள்ள இவரை மிகவும் உயர்ந்த தனம் என்று ஆழ்வான், பின்னர், எம்பார், முதலியாண்டான் போன்றோர் தங்கள் மனதில் வைத்தனர். உயர்ந்த இரத்தினக் கற்களைச் செப்புக் குடத்தில் வைப்பது போன்று இவர்கள் இவ்விதம் தங்கள் மனதில் உடையவரை வைத்தனர். எப்போதும், எக்காலத்திலும் இது போன்றவர்கள் மனதில் நீங்காமல் உள்ளவர் இராமாநுசர் ஆவார். மிகவும் பரந்த இந்தப் பூமியில், பாவம் செய்வதில் என்னைவிட உயர்ந்தவர்கள் தேடினாலும் கிட்டமாட்டனர். இவ்விதம் பாவத்தையே செய்து வரும் நான், வஞ்சகம் நிறைந்த என் மனதில் எம்பெருமானாரை அனைத்துக் காலத்திலும், என் நெஞ்சில் இருக்கும்படி வேண்டுகிறேன். இதனால், “தகாத இடத்தில் எம்பெருமானார் தங்குகிறார்”, என்று அவருடைய பெருமைகளுக்கு என்னால் ஏதேனும் இழுக்கு உண்டாகிவிடுமோ? (என்று அஞ்சுகிறார்)

English Translation

The godly ones always vault Ramanuja in their hearts as their precious wealth. I, this self, sinful without a peer in this whole world, with my deceitful hard heart, have dared to sing his praise. Even if I sing all morning, evening and night, will never exhaust his infinite virtues?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்