விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கார்த்திகை  யானும் கரிமுகத் தானும்*  கனலும்முக்கண்- 
  மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு*  மூவுலகும்-
  பூத்தவனே!  என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த* 
  தீர்த்தனை ஏத்தும்*  இராமானுசன் என்தன் சேமவைப்பே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கார்த்திகையானும் - ஸுப்ரஹமண்யனும்;
கரிமுகத்தானும் - கணபதியும்;
கனலும் - (அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்நியும்;
முக்கண்மூர்க்தியும் - சிவனும்;
மோடியும் - துர்க்கையும்;

விளக்க உரை

ருத்திரனின் புத்திரனாகக் கார்த்திகை நட்சத்திரத்தில் நீரில் பிறந்த ஷண்முகன், யானையின் முகம் கொண்டதால் கஜாநநன் என்ற பெயர் கொண்ட ருத்ர கணபதி, ப்ரளய காலத்தில் இந்த உலகை எரிக்கவல்லதான காலாக்னி போன்ற ஒளி வீசும் மூன்று கண்கள் கொண்டதால் விரூபாக்ஷன் என்ற பெயர் கொண்ட ருத்ரன், துர்க்கை, ஜ்வரதேவதை ஆகிய அனைவரும் பாணாசுர யுத்தத்தில் க்ருஷ்ணனின் அம்புகளை எதிர் கொள்ள இயலாமல் புறமுதுகு காட்டி ஓடினர். அப்போது அவர்கள் – க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் – எனக் கண்ணனையே, “வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்”, என்று கூறுவதற்கு ஏற்றபடி இந்த உலகம் அனைத்தும் உண்டாகக் காரணமாக இருந்த நீரில் ஆலந்தளிரில் பள்ளிகொண்ட ஸர்வேச்வரன் என்று அறிந்தனர். அவர்கள் கண்ணனை, “மூன்று உலகங்களையும் உனது திருநாபிக்கமலம் மூலம் தோன்றிய ப்ரம்மன் வாயிலாகப் படைத்தவனே!”, என்று போற்றி நின்றனர். இவர்களுக்காகத் தனது பேரனான அநிருத்தனைச் சிறை எடுத்த பாணாசுரனைப் பொறுத்து அருளினான். ஒருவன் ஒரு தவறு செய்தாலே பல ப்ராயச்சித்தம் செய்ய வேண்டுவது இருக்க, பாணனின் பல பிழைகளை வெறும் ஸ்தோத்ர மாத்ரத்தில் மட்டுமே பொறுத்துக் கொள்ளும் உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் கொண்ட ஸர்வேச்வரனை, ஸ்ரீபாஷ்யம் கீதாபாஷ்யம் போன்றவை மூலம் அனைத்துக் காலத்திலும், அனைத்து லோகத்திலும் அவனது பராக்ரமங்கள் நிலை நிற்கும்படிச் செய்தவர் எம்பெருமானார் ஆவார். எனது ஆபத்து காலங்களில் உதவுவதற்காகச் சேமித்து வைத்த தனம் இவரே ஆவார்.

English Translation

Subramanya, Vinayaka, Siva, Parvali, Agni and all the other gods turned their backs and fied, then hailed, "O Lord of the three worlds, O Maker!" such was the mercy that Krishna showed on Sana, Ramanuja, who worships him, is our Provident Fund.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்