விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நிதியைப் பொழியும் முகில்என்று*  நீசர்தம் வாசல்பற்றித்- 
  துதிகற்று உலகில் துவள்கின்றிலேன்*  இனி தூய்நெறிசேர்- 
  எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணைய‌டியாம்* 
  கதிபெற்றுடைய*  இராமானுசன் என்னைக் காத்தனனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தூய் நெறி சேர் - பரிசுத்தமான அனுட்டானமுடைய யதிகளுக்கு;
இறைவன் - தலைவரான;
யமுனைத் துறைவன் - ஆளவந்தாருடைய;
இணை அடி ஆம் கதி - உபய பாதங்களாகிற ப்ராப்யத்தை;
பெற்று - பெற்று (அதனாலே);

விளக்க உரை

தூய்மையான அனுஷ்டானங்களை உடைய பெரியநம்பி, திருமலைநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருவரங்கப்பெருமாள் அரையர், திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி, மாறனேரிநம்பி போன்ற யதிகளின் ஸ்வாமியாக உள்ளவர் யார் என்றால் – காட்டுமன்னார்கோயில் எம்பெருமானின் திருநாமத்தை என்றும் பற்றியிருந்த ஆளவந்தார் ஆவார். இவருடைய திருவடிகள் என்னும் உபாயத்தை மட்டுமே பற்றி, அந்தத் திருவடிகள் காரணமாகவே இந்த உலகில் உள்ள ப்ரபன்னர்கள் அனைவருக்கும் ஸ்வாமியாக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். தன்னை அண்டியவர்களைக் காப்பதில் பெருமை ஏதும் இல்லை, தன்னை எளிதில் அண்டாமல் உள்ளவர்களையும் காத்தருளியவர் எம்பெருமானார் ஆவார். ஆகவே இனி உள்ள காலம் முழுவதும் நமது ஸித்தாந்தத்தைத் தூஷிப்பவர்கள், அஹங்காரம் பற்றியவர்கள் ஆகியோருடைய நரகத்தின் வாயிலை ஒத்த அவர்களின் இருப்பிடத்தை நான் நாடமாட்டேன்; அவர்களை, “மேகம் போன்று நவநிதியைப் பொழிவார்கள்”, என்று வாய்க்கு வந்தபடி துதிக்கமாட்டேன்; ஸம்ஸாரத்தில் உழல வைக்கும் இது போன்ற செயல்களில் இனி நான் ஈடுபடமாட்டேன்.

English Translation

Yamunacharya, the king among ascetics of the righteous path, became the preceptor for Ramanuja, our master. Having secured his protection, no more shall I stand and suffer at the door of meanmortals singing their praises as "O, wealth-pouring rain-cloud".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்