விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பருவம் நிரம்பாமே*  பாரெல்லாம் உய்யத்*
  திருவின் வடிவு ஒக்கும்*  தேவகி பெற்ற*
  உருவு கரிய*  ஒளி மணிவண்ணன்*
  புருவம் இருந்தவா காணீரே* 
  பூண்முலையீர்! வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பருவம் - வயது;
நிரம்பாமே - முதிருவதற்கு முன்னமே;
பார்எல்லாம் - பூமியிலுள்ளார் எல்லாரும்;
உய்ய - உஜ்ஜீவிக்கும்படியாக;
திருவின் வடிவு ஒக்கும் - பிராட்டியின் வடிவுபோன்ற வடிவையுடையளான;
தேவகி - தேவகிப்பிராட்டியாலே;

விளக்க உரை

இளமைப்பருவம் வருவதற்கு முன்னரே சிறு குழந்தையாக இருக்கும் போதே உலகத்து மக்களைக் காக்கும் பொருட்டு தீயவர்களை அழித்த, திருமகளை ஒத்த அழகுடைய தேவகி தவம் செய்து பெற்ற, கரிய நிறம் கொண்ட திருமேனியும் ஒளி மிகுந்த மணி வண்ணமும் கொண்ட கண்ணனின் திருப்புருவம் இருந்த அழகைக் காணுங்கள்; அணிகலன்கள் அணிந்த முலைகளை உடைய பெண்களே காணுங்கள். 

English Translation

O Jewel-breasted Ladies, come here and see. This child whom Lakshmi-like Devaki begot, has a dark frame like a radiant black gem. Even before coming of age, he delivers the whole world. See his shapely eyebrows.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்