விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,*  வஞ்ச முக்குறும்பாம்- 
  குழியைக் கடக்கும்*  நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்* 
  பழியைக் கடத்தும்  இராமானுசன் புகழ் பாடி*  அல்லா- 
  வழியைக் கடத்தல்*  எனக்கு இனி யாதும் வருத்தம‌ன்றே.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கூரத்து ஆழ்வான் - கூரத்தாழ்வானாடைய;
சரண் - திருவடிகளை;
கூடியபின் - நான் ஆச்ரயித்த பின்பு;
பழியை கடத்தும் - ஸர்வபாப நிவர்த்தகரான;
இராமாநுசன் - எம்பெருமானாருடைய;

விளக்க உரை

உரை:1

எம்பெருமானாருடையத் துதிப்பதற்குத் தாம் யோக்யதையற்றவர் என்று பின்வாங்கப்பார்த்த அமுதனார், தமக்குள்ள ஆழ்வான் திருவடி ஸம்பந்தத்தை நினைத்து இஃது வாய்கொண்டு வருணிக்கமுடியாத பெரும் புகழ் படைத்தவரும், கல்வி, செல்வம், குலம் என்ற மூன்றுவகை ஸம்பத்தும் புஷ்கலமாயிருந்தும் அவற்றால் இறைவும் அஸங்கார மடையாதவருமான கூரத்தாழ்வானாடைய சரணுரவிந்தங்களை ஆச்ரயித்து க்ருதக்ருத்யனான வெனக்கு எம்பெருமானாருடைய திருக்குணங்களைப் பாடுதலும் அதுவே காரணமான அர்ச்சிராதிகதியொழிந்த மற்ற கதிகளிற் போகாதபடி அவ்வழியேபோதலும் மிகவுமெளிதேயாம் என்றாராயிற்று. நம் பூருவாசாரியர்கள் எல்லாருமே சிறந்த புகழுடையராயினாம் ஆழ்வானாடைய புகழ் அத்யந்த விலக்ஷணமென்பது ப்ரஸித்தமான விஷயம்;. நம் தர்சந்ததுக்கு மஹாத்ரோஹியான நாலூரானாக்குக் கொடிய நரகங்களைக் கொடுக்க வேணுமென்று பகவத்ஸந்தியிலே ப்ரார்த்திக்க வேண்டியிருக்க, பேரருயாளன் திருமுன்பே வரதராஜஸ்தவத்தை விண்ணப்பம் செய்து கண்தெரியும்படி வரம் வேண்டிக்கொள்ளீர் என்ற வரம் வேண்டிக்கொள்ளும்படி விசாலமான திருவுள்ளம்பெற்ற ஆழ்வானாடைய புகழை நாம் என்சொல்வோம்! “மொழியைக்கடக்கும் பெரும்புகழான்” என்றுசொல்வது தவிர வேறு வாசக மில்லைகாணும்.

உரை:2

ஒரு சில பதங்கள் மூலம் வர்ணிக்க அரியதாகவும், பரமபதம் அளவு பெருகிநிற்கும் திருக்கல்யாண குணங்கள் நிரம்பியவராகவும் உள்ளவர்; தவறான பாதையில் ஆத்மாவை இட்டுச் செல்ல வல்லதான அஹங்காரம், வித்யாகர்வம், தனகர்வம் ஆகிய மூன்று பெறும் குழிகளை மிகவும் எளிதாகக் கடந்து நிற்பவர்; நமக்கு நாதனாக உள்ளவர் – இவர் யார் என்றால் நம்முடைய கூரத்தாழ்வான் ஆவார். அப்படிப்பட்ட கூரத்தாழ்வானின் திருவடிகளை நாம் அண்டிய பிறகு நிகழ்வது என்ன? ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுசன், தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் என்று கூறும்படியாகத் திருக்கல்யாண குணங்களை கொண்ட உடையவரின் குணங்களை சிந்தித்தபடி இருக்கும் நிலையானது எனது பாவங்கள் காரணமாக எனக்கு இதுவரை ஏற்படாமல் இருந்தது. அந்த நிலை மாறி (கூரத்தாழ்வானின் திருவடிகளை அண்டிய பின்னர்) , எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களையே புகழ்ந்து கூறியபடி, தவறான வழிகளில் செல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இன்று முதல் இனி வரும் காலங்களில் எந்த ஒரு விஷயமானாலும் எனக்குக் கஷ்டம் என்பதே இல்லை.

English Translation

After taking refuge in our Kurattalvar, -his glory is beyond our words, -who takes us out of the piffalls of deceptive knowledge, I sing the praise of Ramanuja who lifts me above sin. I have escaped from non-paths, now I have no regrets.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்