விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று*  இசையகில்லா- 
  மனக்குற்ற மாந்தர்*  பழிக்கில் புகழ்*  அவன் மன்னியசீர்- 
  தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா* 
  இனக்குற்றம் காணகில்லார்,*  பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இசைய கில்லா - அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத;
மனக்குற்றம் மாந்தர் - துஷ்டஹ்ருதயர் களான மனிசர்;
பழிக்கில் - (இந்நூலைப்) பழிப்பவர்களாடல்;
புகழ் - (அன்னவர்களுடைய பழிப்பே இதற்குப்) புகழாய்விடும்;
அவன் - அவ்வெம்பெருமானாருடைய;

விளக்க உரை

உரை:1

உலகத்தில் ஓரு பிரபந்தம் பிறந்தால் அதனைத் தூஷிப்பார் பலரும், பூஷிப்பார் சிலரும் ஏற்படுவது வழக்கம். உண்மையில் தோஷங்கள் இல்லாதிருந்தாலும் எதையாவது சொல்லித் தூஷித்தே தீருவர்கள்; குற்றங் குறைகள் இருந்துவிட்டால் தூஷகர்களின் உத்ஸாஹம் கேட்கவே வேண்டியதில்லை. அறிவிலியான நான் இயற்றும் இந்நூலில் தோஷங்கள் தான் மிகையாக இருக்கக்கூடும்; அவற்றைக்கண்டு சிலர் நிந்திப்பர்களாகில், அன்னவருடைய தூஷணம் நமக்கு பூஷணமேயா மித்தனை என்கிறார். 'பிறருடைய பழிப்பு நமக்கு அப்ரயோஜகம்’ என்று சொல்லவேண்டியிருக்க, அவர்களுடைய பழிப்புத்தானே நமக்குப் புகழாம் என்கைக்குக் கருத்தென்? அவர்களது பழிப்பு இவர்க்கு எப்படி புகழாய் விடும்? என்று சிலர் சங்கிக்கக்கூடும். அவர்கள் தெளியுமாறு சொல்லுகிறோம்;- அமுதனாராம் ஒருவர்; அவர் இராமாநுச நுர்ற்றந்தாதி என்றொரு பிரபந்தம் பாடினாராம்; அதில் ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசன் என்று சொன்னதையே சொல்லிக்கொண்டுகிடக்கிறார். தவிரவும் சாஸ்திரங்களில் புருஷார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ள ஐச்வர்யம் முதலானவற்றை இகழ்ந்துரைக்கிறார்; ஸகல புருஷார்த்தங்களும் தமக்கு உடையவர் தானாம்; எம்பெருமானைக்கூட அவர் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டாராம். என்றிவை போல்வன சிலவார்த்தைகளைச் சொல்லிப் பழிப்பார்கள். வாஸ்தவத்தில் இவையெல்லாம் குணமேயாதலால் குணகீர்த்தநத்தில் சேர்ந்து புகழ்ச்சியேயாய்முடியக் குறையில்லையென்க. எம்பெருமானைப்பழித்ரு சிசுபாலாதிகளும் பர்யாயேண குணகீர்த்தநம் பண்ணினார்களாகவன்றோ உய்ந்துபோனது.

உரை:2

நிலையற்ற உலகச் செல்வம் போன்று இல்லாமல் எப்போதும் என்னிடம் நிலைத்து நிற்கும் ஸம்பத்தாக, “தந்தை நல்தாய் தாரம் தனையர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா” என்னும்படியாக உள்ள எம்பெருமானாரே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் நிதி என்று நான் அறிந்து கொண்டேன். அவருடைய புகழ் முழுவதையும் எனது இந்தப் பாசுரங்கள் மூலம் பறை சாற்றினேன். யதிராஜரின் உயர்ந்த குணங்களை அனுபவிக்கத் தகுதி உடைய பக்தி கொண்டவர்கள் நினைப்பது, “இந்தப் பாசுரங்கள் முழுவதும் எம்பெருமானார் மீது கொண்ட பக்தி காரணமாகவே உண்டானது; வேறு எந்தவிதமான பயன் கருதியும் இவை இயற்றப்படவில்லை”, என்பதாகும். இதனால், இந்தப் பாசுரங்களில் ஏதேனும் குற்றம் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வார்கள். ஆயினும், “நமது செல்வம் இராமானுசர்”, என்று கூறுவதை ஏற்காத சிலர், தங்களின் தோஷம் நிறைந்த மனத்தால், இந்தப் பாசுரங்களில் குற்றம் உள்ளது என்று நிந்திக்கக்கூடும். அவற்றையும் நாம் புகழ் என்றே எடுத்துக்கொள்வோம்.

English Translation

If me of pervese hearts who do not consider Ramnauja their asset, heap slander, I take it as praise. Surely those who love his good qualities will not find fault with my poetry, by which I am only recalling his name.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்