- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
எம்பெருமானாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு ஆளான நான் இனி ஒருநாளும் எவ்விதமான ஹாநியையும் அடைமாட்டேன் என்கிறார், பதார்த்தகோடியில் சேராமல் துச்சனாயிருந்த எனது கருமங்களையெல்லாம் வேரற நீக்கி, தமது பாதாரவிந்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானார்; இப்பேறு பெற்ற எனக்கு இனி ஒரு குறையுமில்லை என்றாராயிற்று. மருள் சுரந்த - அஜ்ஞாந்த்தாலே செய்யப்பட்ட என்கை; மருளாலே சுரக்கப்பட்ட என்றவாறு. (ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த) ஊழிமுதல்வனான எம்பெருமானையே பரவும்படி அமுதனாராகிய தம்மைச்செய்தருளின - என்று அர்த்தமல்ல; பகவத்விமுகரா யிருந்தவர்களை யெல்லாம் உபதேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணராம்படி செய்தருளினவர் என்று பொதுப்படையாகச் சொன்னபடி. ஊழிமுதல்வன் - பிரளயகாலத்தில் முழுமுதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்.
உரை:2
“இருள் தரு மா ஞாலம்” என்று கூறப்படும் இந்த உலகத்தில் ஒரு பொருட்டாகவே கருத இயலாதபடி நான் இருந்தேன். அப்படிப்பட்ட என்னை ப்ரஹ்மவித்துக்களில் உயர்ந்தவனாகவும், சிறந்த வஸ்து என்று அனைவரும் கூறும்படியாகவும் எம்பெருமானார் மாற்றினார். எனது அறியாமை காரணமாகப் பல காலமாகவும், இந்தப் பிறவியிலும் எண்ணற்ற பாவங்கள் சேர்ந்தன. அந்தக் கர்மவினைகளை முற்றிலுமாக வேருடன் அழித்தார். அனைத்துக் காலங்களிலும் நிலையாக நிற்கும் ஸர்வேச்வரனை மட்டுமே அனைவரும் உணர்ந்து கொண்டு வணங்கும்படியும், மற்ற தேவதைகளின் தொடர்பு நீங்கும்படியும் செய்தார். அனைவரும் விரும்பி அனுபவிக்கும்படியாக ஸ்ரீபாஷ்யமும் கீதாபாஷ்யமும் அருளிச்செய்த எம்பெருமானார், தனது தாமரைமலர் போன்ற திருவடிகளை என் தலை மீது வைத்து அருளவும் செய்தார். இத்தனைக்கும் பிறகு என்னிடம் குறை என்பது என்ன இருக்கப் போகிறது?
English Translation
Our lord Ramanjua, who exhorted all to worship the first-Lord alone, made a person out of me in this world. He destroyed by the root the darkness my age-old Karmas, and gave me his feet to wear on my head, I have nothing to fear.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்