விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெற்றுஇனிப் போக்குவனோ*  உன்னை என் தனிப்பேருயிரை* 
    உற்ற இருவினையாய்*  உயிராய்ப் பயன் ஆவையாய்*
    முற்றஇம் மூவுலகும்*  பெரும்தூறுஆய் தூற்றில்புக்கு* 
    முற்றக் கரந்துஒளித்தாய்!*  என்முதல் தனிவித்தேயோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தூற்றில் புக்கு - இந்தத் தூறு தன்னுள்ளே புகுந்து
முற்ற கரந்து ஒளித்தாய் - ஒருபடியாலு மறிய வொண்ணாதபடி மறைந்து நிற்குமவனாய்
என் முதல் தனி வித்தே ஓ - எனக்கு உன்னைக் கிட்டுகைக்கு மூல ஸீக்ருதமாயிருப்பவனே!
என் தனிபேர் உயிரை உன்னை - எனக்கு அஸாதாரண தாரகனான வுன்னை
பெற்று இனி போக்குவனோ - பெற்று வைத்து இனி விடுவேனோ!

விளக்க உரை

மிகவும் விஸஜாதீயனாயிருந்த எனக்கு மிகவும் தாரகனான வுன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ? உயிரைவிட்டு உடல் தாரிக்கவற்றோ வென்கிறார். இப்பாட்டில் ‘என் தனிப் பேருயிரை” என்பது உயிரானது. உற்ற இருவினையாய்-உன்னை யொழிய வேறு சில கருமங்களை ஸ்வதந்த்ரமாக நினைத்திருந்தே னாகிலன்றோ உன்னை யொழிய வேறு சில கருமங்களை ஸ்வாந்த்ரமாக நினைத்திருந்தே கிடக்கிற புண்யபாபங்களாகிற கருமங்கள் நீயிட்ட வழக்கன்றோவென்கை. உயிராய்-கருமங்களை யஎஷ்டிப்பவர்களான சேதநா;களும் நீயிட்டவழக்கன்றோ. பயனாயவையாய்-கருமபலன் உன்னையொழிய ஸித்திக்குமென்றிருந்தேனோ வென்கை. இப்போது இவை யெல்லாஞ் சொல்லுகிறது எதற்காக வென்னில்; தம்மிடத்தில் ஒன்றும் எதிரிபார்க்க நியாயமில்லை யென்கைக்காக. முற்றவிம் மூவுலகும் பெருந்தூறாய்-மூவுலகங்களுமாகிற இந்த ஸம்ஸாரம் புதர் போன்றது, இதை யுண்டாக்கினவனும் நீயே. தூற்றில் புக்கு முற்றக் கரந்தொளித்தாய்-இங்ஙனே புதராயிருக்கின்ற ஸம்ஸார நிலமெங்கும் வியாபித்து ஒருவருமறயாதபடி நின்றாய். என் முதல் தனிவித்தே!-எனக்கு ப்ரதமஸீக்ருத மானவனே! என்றபடி. நானாக ஒரடிவந்திலேன்; முதலே பிடித்து க்ருஷிபண்ணினவன் நீயேயன்றோ வென்றபடி. ஆக இவ்வளவு ஹேதுக்களாலே உன்னை இனிப்போக்குவனோ வென்றாராயிற்று.

English Translation

How will let you go, my own sweet over-soul? You are the endless karmas, their fruit and the enjoyer. Like a huge black hole you have entered the three worlds, and hidden yourself completely! O My first-seed!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்