விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முனியே! நான்முகனே!*  முக்கண்ணப்பா*  என்பொல்லாக்- 
    கனிவாய்த்*  தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*
    தனியேன்ஆர்உயிரே!*  என்தலை மிசையாய் வந்திட்டு* 
    இனிநான் போகல்ஒட்டேன்*  ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தனியேன் ஆர் உயிரே - என்னொருவனுக்குப் பாரி பூர்ண ப்ராணனானவனே
என் தலை மிசை ஆய் வந்திட்டு - என் தலைமேலே வந்து சேர்ந்தாயான பின்பு
இனி நான் போகல் ஒட்டேன் - இனி யொருநாளும் உன்னை அகன்றுபோக இசையமாட்டேன்:
என்னை - ஆர்த்தி மிகுந்த என்னை
ஒன்றும் மாயம் செய்யேல் - ஒரு படியாலும் வஞ்சிக்கலாகாது.

விளக்க உரை

உரை:1

நிர்ஹேதுகமாக வடிவழகைக் காட்டி என்னை யீடுபடுத்திவைத்து உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிவைத்து இப்படி ஸம்ஸாரத்திலே இன்னமும் தள்ளி வைப்பது தகுதியன்று என்கிறார். (முனியே நான்முகனே முக்கண்ணப்பர்.) ஆழ்வார் திரிமூர்த்திகளிலே ஸாம்ய ப்ரமமோ ஜக்கிய ப்ரமமோ உடையவரல்லர். திண்ணன் வீடு ஒன்றுந்தேவுமுலகும் முதலான திருவாய்மொழிகளிலே நன்கு பரத்வஸ்தாபனம் பண்ணியருளினவருடைய திருவாக்கானவிதி;ல் வேறுவகையான பொருள் காணப்ரஸக்தியில்லை. நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய், சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாயயனானாய் என்பது முதலான விடங்களிற்போல சாரிராத்மபாவநிபந்தனமான ஜக்யவ்யபதேசமென்று உணர்க. நான்முகனையும் முக்கண்ணப்பனையும் அநுப்ரவேசித்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நடத்திப் போரும் முனியே என்றபடி. எந்தக்காரியத்திற்கும் மாநஸமான ஸங்கல்பத்தைப்; பண்ணுமவன் என்ற பொருளில் முனி யெனப்பட்டது. என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே!-கீழ் முதலடியில் ஸர்வஸா காரணமான ஸ்வரூபத்தை யநுஸந்தித்து இப்போது அஸாதாரண திவ்ய மங்கள விக்ரஹவைலகூஷண்யத்தை யநுபவித்துப் பேசுகிறார். இப்படிப்பட்ட வடிவழகைக் காட்டித் தம்மைக் கொள்ளை கொண்டபடியைக் கூறுகிறார் என் கள்வா! என்று. என் இசைவின்றிக்கே என்னை யபஹாரித்தவனே! என்றபடி தனியேனாருயிரே!-வேறொன்றால் தாரிக்க வொண்ணாதபடி என்னைப் பண்ணினவனே! என்கை. ஸம்ஸாரிகளோடு பொருந்தாமையை யிட்டுத் தன்யேன் என்கிறார் என் தலைமீசையாய் வந்திட்டு இனி நான் போக லொட்டேன் - நித்யஸம்ஸாரியாயிருந்த வென்னை விஷயீகாரித்த வளவேயன்றிக்கே நான் பாரிபூர்ணாநுபவம் பண்ணும்படியாகவும் வந்திட்டு இன்னமும் உபேகூஷிக்கப் பார்த்தாயாகில் ஒட்டுவேனோ? சேஷ்யே புரஸ்தாத் சாலாயாம் யாவந்மே ந ப்ரஸீததி என்ற பரதாழ்வான் வார்த்தை போலே யிருக்கிறதாயிற்று இது. ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அநாதிகாலம் அகற்றி வைத்தாப் போலே இன்னமும் அகற்றப் பார்க்க வேண்டா வென்றபடி.

உரை:2

என் தலைவனே! நான்முகனே! முக்கண்ணப்பனே! என் பொல்லாத கனி போன்ற திருவாயை உடைய தாமரைக்கண்களை உடைய கருமாணிக்கமே! என் கள்வனே! என்னுடைய ஆருயிரே! என் தலைமிசையாய் உன் திருவடிகளை நீ வைத்த பின் இனி நான் உன்னை போக விடமாட்டேன். ஒரு மாயமும் என்னிடம் செய்யாதே.

English Translation

O Bard, Brahma, Siva, my wicked coral-lipped Lord of lotus eyes, my black uncut Gem! The soul of this forlorn self! At last you have come to me. Now I shall not let you go, pray do not play your tricks again

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்