விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்துஅவர் எதிர்கொள்ள*  மாமணி மண்டபத்து* 
    அந்தம்இல் பேரின்பத்து*  அடியரோடு இருந்தமை*
    கொந்துஅலர் பொழில்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்- 
    சந்தங்கள்ஆயிரத்து*  இவைவல்லார் முனிவரே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவர்  வந்து எதிரி கொள்ள - அந்த பெருமாளும் பிராட்டியும் வந்து எதிரிகொள்ள
மாமணி மண்ட பத்து - திருமாமணி மண்டபத்திலே
அந்தம் இல் பேர் இன்பத்து - முடிவில்லாத மஹானந் தத்தை யுடைய
அடியரோடு - பரம்பாகவதர்களோடே கூடி
கொத்து அலர்பொழில் குரு கூர் சடகோபன் - பூங்கொத்து அலருகிற சோர்லைகளை யுடைத்தான திருநகாரிக்குத் தலைவரான ஆழ்வார்

விளக்க உரை

இப்பதிகம் வல்லார், நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி அதிலே யீடுபட்டு அதுக்கவ்வாருகு கால்வாங்க மாட்டாதே யிருப்பாரோ டொப்பர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறாராயிற்று. கீழ்ப் பாசுரங்களில் சொல்லிற்றை யெல்லாம் ஸங்க்ரஹமாக அநுபாஷிக்கிறாராயிற்று. வந்தவ ரெதிரி கொள்ள என்று. “பிராட்டியோடே கூட எம்பெருமான் தான் வந்து எதிரிகொள்ள” என்;;கிற பொருளையருளிச் செய்வர் நம்பிள்ளை. அயர்வறுமமரர்களும் அவர்களது அதிபதியுமாக எல்லாரும் வந்து எதிரி கொள்ளத் தட்டில்லையே. இப்படி எதிரி கொண்டவர்கள் அனைவரும் புடை சூழ ஆனந்த மயமான திருமாமணி மண்டபத்திலே ப்ரஹ்மானந்த சாலிகளான அடியார்களின் அழகோலக்கத்தின் நடுவே இருந்தபடியையாயிற்று இப்பதிகத்திலருளிச் செய்தது, அந்தமில் போரின்பத்து என்ற விடத்து ஈடு;- “ஸம்ஸாரத்தில் ஸீகமென்று ப்ரமிக்கு மித்தனை; துக்கமேயுள்ளது பாண்டு ஒருவன்மேலே அம்பைவிட ஸம்ஸாரத்தில் ஆயிரங் கூற்றில் ஒரு கூஷணமாயிற்று ஸீகமுள்ளது; அத்தனையும் புஜிக்க வொட்டிற்றில்லையே என்றானிறே.” என்பதாம். (அடியரோடிருந்தமை) ஆழ்வார் திருநாட்டிலே எம்பெருமானை யநுபவிக்கப் பெற வேணுமென்று ஆசைப்பட்டாரல்லர்; ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவதென்று கொலோ!” என்று அடியாரோடிருக்கவே ஆசைப்பட்டார்; ஆசைப்பட்டபடியே பெற்ற பேற்றைத் தெரிவித்தாராயிற்று இங்கு.

English Translation

The devotee then stood face to face before the Lord in his jewel Mandapa in everlasting joy. Those who master this decad of the thousand by kurugur satakopan will become bards

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்