விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேள்விஉள் மடுத்தலும்*  விரைகமழ் நறும்புகை* 
    காளங்கள் வலம்புரி*  கலந்துஎங்கும் இசைத்தனர்*
    ஆள்மின்கள் வானகம்*  ஆழியான் தமர் என்று* 
    வாள்ஒண் கண்மடந்தையர்*  வாழ்த்தினர் மகிழ்ந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விரை கமிழ - பரிமளம் மிக்க
நறுபுகை - ஸீகந்த தூபங்களானவை
எங்கும் கலந்து - எங்கும் வியாபிக்க
காளங்கள் வலம் புரி - திருச்சின்னங்களையும் சங்கு களையும்
இசைத்தனர் - ஊதினார்கள்

விளக்க உரை

திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார். வேள்வியுள் மடுத்தலும்-கீழ்ப்பாட்டிற் சொன்ன யாகபல ஸமரிப்பணம் நடைபெற்றவளவிலே யென்றபடி. வேறே சிலர்நறுமணம் மிக்க தூபங்களையிட்டார்கள். வேறே சிலர்காளங்களையும் சங்குகளையும் ஒலிப்பித்தார்கள் காளமென்பது திருச்சின்னம்; காஹளம் காஹளீ என்;பர்வடநுற்லார். காஹன மென்ற சொல்லே காளமெனத் திரிந்தது. ஆழியான்தமர் வானகம் ஆண்மின்கள் என்று வாளொண்கண் மடந்தையர் மகிழ்ந்து வாழ்த்தினர்-எம்பெருமானுடைய கையுந்திருவாழியுமான அழகிலே யீடுபட்டவர்களன்றோ நீங்கள்; வாருங்கள்! இவ்விடத்தை யாறுங்கள்! என்று சொல்லி திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினர். வாளொண்கண் என்ற அடைமொழியின் கருத்தை நம்பிள்ளை விவாரித்தருளுகிறார் காண்மின்-“தேசாந்தரத்தில் நின்றும் போந்த ப்ரைஜையைத் தாய்மார் குளிரப் பார்க்குமாபோலே ஒளியையுடைய அழகிய கண்களாலே குளிர நோக்கினபடி”. (மகிழ்ந்து) என்பதனால் ஒருவருடைய நிர்ப்பந்தத்திற்காகச் செய்கிறார்களல்லர், ப்ரீதிதூண்டச் செய்கிறார்களென்பது போதரும் முடிவில் நம்பிள்ளை ஸ்ரீஸீக்தி;

English Translation

Incense rose with fire oblations, bugles and concehs rent the air, "Rule the sky, O Devotee!", the Vel-eyed dames cheered lustly

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்