விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்*  திருமாலிருஞ்சோலை* 
    வஞ்சக் கள்வன் மாமாயன்*  மாயக் கவியாய் வந்து*  என்-
    நெஞ்சும் உயிரும் உள்கலந்து*  நின்றார் அறியா வண்ணம்*  என்- 
    நெஞ்சும் உயிரும் அவைஉண்டு*  தானே ஆகி நிறைந்தானே.   (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்றார் அறியா வண்ணம் - அருகே நின்ற பிராட்டியர் முதலானாருமறியாதபடி
(ஏனிப்படி சொல்லுகிறேனென்னில்)
திருமாலிருஞ் சோலை - திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்கின்ற
அவை என் நெஞ்சும் உயிரும் உண்டு - அந்த என்னெஞ்சையுமுயிரையும் பஜித்து
வஞ்சம் கள்வன்  மா மாயன் - வஞ்சனையும் களவும் மாயமுமே வடிவெடுத்த பெருமான்
தானே ஆகி     (என்னைக் காண இடமின்றிக்கே) - தானேயாகி

விளக்க உரை

உயிர்காத்து ஆட்செய்மின் - நீங்கள் கவிபாட வேணுமானால் முன்னம் நீங்கள் இருந்தாக வேணுமே; இத்தலையுடானாலன்றோ அத்தலைக்கு மங்களா சாஸனம் பண்ண முடியும். ஆகவே முன்னம் உங்களை நோக்கிக்கோண்டு கவிபாடப் பாருங்கோள் என்கிறார். செஞ்சொற்கவிகள்! என்ற விளிக்குச்சேர “உயிர்காத்துக் கவிபாடுமின்* என்ன வேண்டியிருக்க ஆட்செய்மின் என்கிறது - கவிபாடுகையும் வாசிகமான ஆட்செய்கையாகையாலே “ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட மாயன்” என்று பண்டே சொல்லி வைத்திருக்கிறாராழ்வார். எம்பெருமான் வாசிக கைங்காரியமாகிற அடிமையைக் கொள்வான் போலப் புகுந்து பின்பு நீர்மைக் குணத்தினால் உயிரைக் கொள்ளை கொள்ளுமவனாதலால் அந்த நீர்மையில் உள்குழையாதே வலிய நெஞ்சராயிருங்கோ ளென்கிறாராயிற்று. சிற்றாள் கொண்டான் என்கிற ஸ்வாமி பணிப்பராம் - “ஆழங்காலிலே யிழிந்து அமிழ்ந்துவார் அவ்விடத்தே கொண்டைக்கோல் நாட்டுமாபோலே ஆழ்வாரும் கொண்டைக்கோல் நாட்டுகிறார்” என்று. ஆழ்வார் இப்படியருளிச்செய்வதன் பரமதாற்பாரியமென்ன வென்றால், எம்பெருமானுடைய மற்றைக் குணங்களெல்லாவற்றிலுங் காட்டில் சீல குண மொன்று மிகவும் ஆற்றவொண்ணாதது, இதற்குத் தப்பிப்பிழைப்பது அர்து - என்பதேயாம். அக்குணத்தின் சீர்மையையெடுத்துக் காட்டுகிற ளுக்திசாதுரியம் “உயிர்காத்தாட்செய்மின்” என்பது. இன்னாருயிரைக் காத்து ஆட்செய்யும்படி வ்யக்தமாகச் சொல்லாமையாலே, எம்பெருமானுயிரைக் காத்து ஆட்செய்மின் என்பதாகவுங் கொள்ளலாமென்று உடையவர் அருளிச் செய்வராம். அதன் கருத்து யாதெனில், அவன் மேல்விழவிழத் தாங்கள் இறாய்த்தால் அவனை யிழக்க நேருமே; அப்படி யாகாமே அவருயிரைக் காவுங்கோள் என்பதாம். இப்பொருளிளல் சுவை யொன்று மில்லையேயென்று சிலர்மயங்குவர். கேண்மின்; என்னுடம்பில் அவன் சாபலம்காட்ட, அதை நான் தடுக்க, பின்னையும் அவன்மேல்விழ, பிரானே! உனக்குப் பாரதந்திரியம் ஜீவிக்கவேணுமேயென்று நான் விலங்கிட்டாற்போல் வார்த்தை சொல்ல் அதன்மேல் அவன் கைகூப்பி நிற்க, அந்த சீல குணத்திலே உருகும்படியான நிலைமை எனக்கு ஏற்பட்டது; நீங்களும் என்னைப்போல் அவனை விலக்கத் தொடங்கினீர்களாகில் அவனை யிழக்கவே நேரும்; பின்னை யாரைக் குறித்துக் கவிபாடுவது? ஆகவே அவருயிரைக் காத்து ஆட்செய்மின்கள்; அவன் விரும்பிய போகத்தை நான்தான் குலைத்தொழிந்தேனாகிலும் நீங்களாவது குலைக்காதபடி அவன் வழியே யொழுகி அநுபவிக்கப்பாருங்கள் - என்பதான சுவைக்கருத்து உணர்க. இவ்விஷயத்திலே தாமிழந்து அனர்த்தப்பட்ட படியை யருளிச்செய்கிறார் மேல் திருமாலிருஞ் சோலை வஞ்சக்கள்வனென்று தொடங்கி, தான் சேஷியாகவும் நான் சேஷபூதனாகவுமிருக்கிற இம்முறையை நிலைநாட்டுவதற்காக வருவான்போல வந்து, தன்னுடைய கள்ளச் செயல்வல்லமையினால் அத்தலையித்தலையாம்படி பண்ணி என்னைத் தன் தலைமேல் தூக்கிக்கொண்டு உலாவுவானாயிருந்தான். இப்படிப் பட்ட வஞ்சகக் கள்வனவன் என்பதை நான் பண்டே யறிந்துவதை;துங்கூட வலையில் சிக்கவேண்டியதாயிற்று; அவன் மாமாயனாகையாலே, மாயப்பொடி தூவி மயக்கிவிடுகிறானே! என் செய்வேனென்கிறார்போலும். ‘பெய்யுமா முகில்போல் வண்ணா! உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாய மந்திரந்தான் கொலே!” என்றார்களே இவனுடைய வஞ்சக்கள்வ மாயங்களில் பழகின கோபிகளும், அறிந்தும் தப்பவொண்ணாமை கூறினபடி மாமாய னென்று.

English Translation

O Sweet-tongued poets, be one your guard when you sing! The Tirumalirumsolai-Lord is a wicked trickster. He entered my heart and soul as a wonder-poet, then ate them, became them, and filled me without my knowing

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்