விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திகழ்கின்ற திருமார்பில்*  திருமங்கை தன்னோடும்* 
    திகழ்கின்ற திருமாலார்*  சேர்விடம்தண் வாட்டாறு*
    புகழ்நின்ற புள்ஊர்தி*  போர்அரக்கர் குலம்கெடுத்தான்* 
    இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து*  எப்பொழுதும் பிரியானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திகழ்கின்ற திருமாலார் - விளங்குகின்ற லஷிமீநாதன்
சேர்வு இடம் - நித்யவாஸம் பண்ணுமிடம் என் நெஞ்சத்து எனது நெஞ்சிலே
நண் வாட்டாறு - குளிர்ந்த திருவாட்டாற்றுப் பதியாம்
இகழ்வு இன்றி எப்பொழுதும் பிரியாள் - வெறுப்பின்றியே ஓகு போதும் பிரியாதேயுளன்
நின்ற புகழ் - நிலைநின்ற புகழையுடைய

விளக்க உரை

இகழுகைக்கு வேண்டுவனவுண்டான வென்னிடத்தில் சிறிது மிகழ்வின்றியே எப்பொழுதும் பிரியாதே யிராநின்றானே! இது என்ன வியாமோஹமென்று தம்மிலே தாம் வியக்கிறார். தனக்கு திவ்யமஹிக்ஷியோ ஸர்வலேகேச்வாரியான பெரிய பிராட்டியர்; தான் உறையுமிடமோ திருநாட்டிற் காட்டிலும் வீறுபெற்ற திருவாட்டாறு: தனக்கு திவ்யவாஹனமும் அடியாருடைய விரோதிகளைத் தொலைக்கும் பாரிகரமும் பெரிய திருவடி; இப்படிப்பட்ட பெருமைகளைப் பெற்றுவைத்து, என்னுடைய தாழ்வுகளைப்பார்த்து என்னையிகழாதே ஒரு நொடிப்பொழுது என்னைப் பிரிந்தால் தாரிக்கமாட்டாதானாய்க் கொண்டு என்னெஞ்சினுள்ளே புகுந்திருந்தருளினான்! இது என்ன வியாமோஹம்! என்கிறார். திகழ்கின்ற திருமார்வில் - திருமார்புக்கு ஓர் ஆபரணமிட்டு அதனால் விளக்கம் பெறுவிக்கவேணுமோ? வெறும் புறத்திலேயே ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோ விளங்கா நிற்பது; அதற்மேலே பெரிய பிராட்டியாரும் சேர்ந்ததனாலுண்டான வழகு பேச்சுக்கு நிலமாமோ? உலகில் பலரையும் ஸ்ரீமான்களென்று சொல்லுவதுண்டு; அது உபசார வழக்கேயன்றி வேறில்லை; திருமங்கை தன்னோடும் திகழ் கையாலே உள்ளபடி ஸ்ரீமானாயிருப்பவன் எம்பெருமானொருவனே. அப்படிப்பட்டவன் திருவாட்டாற்றில் வாஸம் பெற்றது பெருமைக்குமேல் பெருமையாயிற்று. *வேதாத்மா விஹகேச்வர:* என்னப்பட்ட பெரிய திருவடியை வாஹனமாகக் கொள்ளப் பெற்றது இன்னமும் பெருமையாயிற்று இப்படி பெருமைக்கெல்லாம் எல்லையான பெருமை பெற்றவன் இகழ்வின்றி யென்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே - *மாறிமாறிப்; பல பிறப்பும் பிறந்த நித்ய ஸம்ஸாரி யிவனென்று தண்மைபாராதே ஒரு ஷணமும் விட்டுப் பிரியாதே யிருக்கிற இவ்விருப்புக்கு அடியான வியாமோஹமென்கொல்! என்கிறார்.

English Translation

The jewel-Lord reclines in cool Tiruvattaru. On his radiant chest he bears the lotus-dame Lakshmi. Riding the worthy Garuda, he destroyed many Asuras. He resides in my heart forever, of his own accord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்