விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குரைகழல்கள் குறுகினம்*  நம் கோவிந்தன் குடிகொண்டான்* 
    திரைகுழுவு கடல்புடைசூழ்*  தென்நாட்டுத் திலதமன்ன*
    வரைகுழுவு மணிமாட*  வாட்டாற்றான் மலர்அடிமேல்* 
    விரைகுழுவு நறும்துளவம்*  மெய்ந்நின்று கமழுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நம் குடி கொண்டான் - நம்மையே தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான்     .
திரை குழுவு கடல் புடை சூழ் - அலைத்திரட்சியை யுடைய கடலாலே புடை சூழப் பட்டு
தென் நாடு நிலதம் அன்ள - தென்னாட்டுக்குத் திலகம் போன்றிருப்பதாய்
மலர்அடி மேல் - திருவடித் தாமரைகளின் மீது சாத்தின
வரை குழுவு மணி மாடம் - மலைகள் திரளவிருந்தாற் போன்றுள்ள மாடங்களை யுடைத்தான

விளக்க உரை

எட்டாம்பத்தில் குட்டநாட்டுத் திருப்புலியூரெம்பெருமானுடைய திருவருள் தமக்குப் பலித்தபடியைத் தோழிபேச்சாலே வெளியிடுமளவில் *அன்றி மற்றொருபாயமென்? இவளந்தண்டுழாய் கமழ்தல் * என்ற திருத்துழாய்ப் பரிமளம் திருமேனியிலே கமழ்வதையிட்டு நிரூபித்தாராழ்வார்; இப்போது திருவாட்டாற்றெம்பெருமானுடைய திருவருள் பலித்தபடியையும் அந்த நிரூபகத்தையிட்டே தம் வாயாலே பேசுகிறார். “குரைகழல்கள் குறுகினமே” யென்றார் கீழ்ப்பாட்டில்; அது மெய்யேயென்கைக்காக மீண்டுமிப் பாட்டில் குரைகழல்கள் குறுகினமென்கிறார்; அதை மூதலிக்கிறார் வாட்டாற்றான் மலரடிமேல் விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே யென்பதனால். “கோவிந்தன் நம் குடிகொண்டான்” என்றும் “நம் கோவிந்தன் குடிகொண்டான்” என்றும் அந்வயிக்கலாம். பசுக்களோடுங் கலந்து பாரிமாறிக் கோவிந்தனென்று பெயர்படைத்த பெருமான் *அரவத்தமளியினோடு மழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானு மகம்படி வந்து புகுந்து* என்றாப்போலே பாரிஜனபாரிவார ஸமேதனாய் வந்து, திருவாய்ப்பாடியில் பஞ்ச லஷங்குடியோடுங்கூட வந்து என்னெஞ்சிலே குடிகொண்டபடி பார்ரென்கிறார். அதற்கு அடையாளங்கூறுவது மேலெல்லாம். (திரை குழுவு கடல்புடைசூழ் இத்யாதி) திரைமிக்கிருந்துள்ள கடலாலே சுற்றுஞ் சூழப்ட்டிருப்பதாய் தென்னாட்டுக்குத் திலகம்போலெயாய் மலைகளை நெருங்க வைத்தாற்போலே மணிமயமான மாடங்கள் நெருங்கியிருப்பதான திருவாட்டாற்றை யிருப்பிடமாகவுடைய ஸர்வேச்வரனது திருவடித் தாமரைகளின்மீது சாத்தியிருந்த பரிமளப்ரசுரமான திருத்துழாயானது என்னுடம்பிலே நிலைநின்று நாறாநின்றது. என் வார்த்தையிலே ஸந்தேஹமுண்டாகில் என்னுடம்பை மோந்து பார்க்க மாட்டீர்களோ

English Translation

We ahve attained the feet of our Lord Govinda who lives in Tiruvattaru surrounded by Jewelled mansions like a Tilaka for the ocean-hemmed south. My person wafts the fragrance of the Tulasi from his feet

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்