விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அருள்பெறுவார் அடியார் தம்*  அடியனேற்கு*  ஆழியான்- 
    அருள்தருவான் அமைகின்றான்*  அதுநமது விதிவகையே*
    இருள்தருமா ஞாலத்துள்*  இனிப்பிறவி யான்வேண்டேன்* 
    மருள்ஒழி நீமடநெஞ்சே!*  வாட்டாற்றான் அடிவணங்கே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழியான் - திருவாழியை யுடையனான எம்பெருமான்
மட நெஞ்சே - சபலமான மனமே!
அருள் தருவான் அமைகின்றான் - க்ருபை பண்ணுவானாகப் பொருந்தியிரா நின்றான்;
நீ மருள் ஒழி - இங்கேயிருந்து அநுபவிக்க வேணுமென்கிற வொரு மருளைத் தவிரப்பார்
அது - அப்படி க்ருபை பண்ணுவது

விளக்க உரை

நெஞ்சே! எம்பெருமான் இன்று நமக்குப் பேரருள் செய்யக் கோலா நின்றான் அதுவும் நாம் விதித்தபடியே செய்யவேணுமென்று நம்முடைய நியமனத்தை யெதிரிபாரா நின்றான்; அந்தோ! இஃது என்ன குணம்! இக்குணத்தையநுபவிக்க இந்நிலவுலகில் ஆளில்லாமையாலே நாம் திருநாட்டிலேபோய் மூதுவரோடு கூடியநுவிக்கலாமா? வருகிறாயா? என்று தம் திருவுள்ளத்தோடே உசாவுகிறார். இப்பாட்டுக்கு இரண்டாமடியே உயிர்நிலையானது. ஆழியான் அருள் தருவானமைகின்றான் - நெஞ்சே! கையுந் திருவாழியுமான ஸர்வேச்வரன் நம்மேல் முழுநோக்காக நோக்கிப் பரம க்ருபையைப் பண்ணுவானாகப் பார்க்கின்றான் திருவாழியை ஒரு கண்ணாலே பாரிப்பது, என்னை யொருகண்ணாலே பாரிப்பதாகா நின்றான்; திருவாழியை விட்டாலன்றோ ளும்மை நான் விடுவது என்னா நின்றான்; திருவாழியாழ்வான் முதலான நித்யஸூரிகள் பக்கலிலே பண்ணும் ப்ரேமத்தை யெல்லாம் என்னொருவன் திறத்து ஒரு மடைசெய்து பண்ணாநின்றான். இங்ஙனே செய்வது ஆர்பக்கலிலேயென்ன, அருள் பெறுவாரடியார்தம் அடியனேற்கு என்கிறார். எம்பெருமான் இப்படிப்பட்ட பேரருளைத் தம்பக்கலிலே செய்வதற்குக் காரணமுங்காட்டிக்கொண்டு சொல்லுகிறபடி. எம்பெருமான் பண்ணும் பேரருளுக்கு இலக்காயிருப்பார் சிலருண்டு; அவர்கள் நமக்கு ஸ்வாமிகள். அவர்கள் பக்கலிலே அவன் பண்ணின அருள் அவர்களவிலே பரியவஸியாமல் நம்வரையிலும் வெள்ளங் கோத்ததுகாண் என்கிறார். நாம் அவன் தன்னையே பற்றியிருந்து அவனையே பார்த்திருந்தோமாகில் இப்பேரருள் பெறமுடியாதுகாண்; அவனருளுக்கிலக்கான அடியர்களையே நாம் பற்றினோமானது பற்றியே இப்பேரருளுக்கு நாம் இலக்காக வேண்டிற்று என்கிறார். எட்டாம்பத்தில் *நெமாற்கடிமைப் பதிகம் பாடினதற்குப் பலன் இன்று பெற்றோம் என்கிறார் போலும். ‘அவனோ அருள்தருவானாயிருந்தான் ; நீரோ அருளைப்பெற அவகாசம் பார்த்திருந்தீர்; அது கிடைக்கிறபோது பெறவேண்டியது தானே, பெற்றுக்கொள்ளும்; இதற்கு தடையென்ன? என்றது நெஞ்சு; அதற்குமேல் கூறுகிறாராழ்வார் அது நமது விதிவகையே என்று. நெஞ்சே! அவன் வெறுமருளையே தருவானாயிருந்தால் அதை நான் பெற்றுவிடமாட்டோனோ? அவன் அருள் தருவதோடு நிற்க வில்லையே? *அஹம் ஸர்வம் காரிஷ்யாமி* என்று பார்த்துவந்த இளையபெருமாள் *க்ரியநாமிதி மாம் வத* என்று ஒரு நிர்ப்பந்தங்கொண்டாரன்றோ. ஏவிக் கொள்ள வேணும் என்றாரோ; அதுபோல இந்த ஸர்வேச்வரன் தானும் ‘ஆழ்வீர்என்னை ஏவி அடிமைகொள்வீர்என்னா நின்றானோ; என்னுடைய விதிநிஷேதங்களுக்குத் தான் கட்டுப்பட்டவனாய். இன்னதை இன்ன விதமாகச் செய்யுமாறு தன்னை நோக்கி விதிக்கவேணுமென்று வேண்டாநின்றானே; இப்படியுமொரு அநியாயமுண்டோ? என்கிறாராழ்வார் நெஞ்சை நோக்கி.

English Translation

The Lord of discus resides in Tiruvattaru, waiting to be commanded by his devotees. No more do I seek birth in this dark world. Dispel all doubts, and worship him. O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்