விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
    நொடி ஆயிரத்துஇப்பத்து  அடியார்க்கு அருள்பேறே  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெடியன் அருள் - ஸர்வேச்வரனுடைய க்ருபையை,
ஆயிரத்து இருபத்து - ஆயிரத்தினுள் இப்பதிகமானது
சூடும் படியான் - அநுபவிக்கு மியல்வினரான
கடகோபன் - ஆழ்வார்
நொடி - அருளிச் செய்ததான

விளக்க உரை

இப்பதிகம் வல்லார், தம்மைப்போலே நெடியானருள் சூடும்படியாவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். “நெடியானருள் சூடும்படியான் சடகோபன்” என்று தமக்கு நிரூபகமருளிச் செய்கிறார்போலும். திருவாய்மொழி தொடங்குபோதே *மயர்வற மதிநல மருளினன்* என்றார் இடையில் *திருமாலாலருளப்பட்ட சடகோபன்* என்றார். இப்போது *நெடியானருள் சூடும்படியான் சடகோபனென்கிறார். இதனால் ஸ்ரீராமாயணத்திற் காட்டிலும் ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் காட்டிலும் திருவாய்மொழிக்குண்டான ஏற்றம் தெரிவிக்கப்பட்டதாகிறது. எங்ஙனேயென்னில் ; ஒருநிலையின்றிக்கே வாய்வந்தபடி பிதற்றுமவனான நான்முகனது அருளினால் தோன்றிற்று ஸ்ரீராமாயணம். மோஹ சாஹத்ர ப்ரவர்த்தகனாய் ச்மசானஸஞ்சாரியாய் சவபஸ்மத்தை உடம்பெங்கும் பூசி எலும்பு மாலையைப்பூண்டு புலித்தோலுடுத்து அறிவுகேட்டுக்கு எல்லை நிலமான இடபத்தை யூர்தியாகக்கொண்டு காலகூடத்தைக் கழுத்திலே யுடையனான ருத்ரனிடத்தில் உபதேசங் கேட்டவர்களான நால்வாரில் ஒருவனான புலஸ்தியனுடைய அருளினால் தோன்றிற்று ஸ்ரீ விஷ்ணு புராணம். அப்படி யன்றிக்கே, திருவுக்குத் திருவாகிய செல்வனாய்ப் பரமஸத்வ நிதியாய்ப் புண்டாரிகாஷனான புருஷோத்தமனுடைய திருவருளடியாகவே தோன்றிற்று திருவாய்மொழி. இனி மிக விரைவாகவே எம் பெருமானுடைய பேரருளைப் பெறவிருக்கிறாராதலால் அது சொல்லுவித்த சொல் என்னவுமாம். *ஆழியானருள் தருவானமைகின்றான் அது நமது விதிவகையே* என்றன்றோ அடுத்த பாசுரமுள்ளது.

English Translation

This decad of the thousand by kurugur Satakopan will secure for devotees the race of the Lord

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்