விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாடீர் நாள்தோறும்*  வாடா மலர்கொண்டு*
    பாடீர் அவன்நாமம்*  வீடே பெறலாமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாள்தோறும் - தினந்தோறும்
அவன் நாமம் - அப்பெருமானது திருநாமங்களை
வாடா மலர்கொண்டு      பாடீர்            பாடுங்கள் (இங்ஙனே செய்தக்கால்) - செவ்வி மாறாத பூக்களைக் கொண்டு
நாடீர்            பணியுங்கள்;            வீடே பெறலாம் - மோஷமே பெறலாகும்

விளக்க உரை

ஸ்வரூபாநுரூபமான காரியத்தைச் செய்யவே ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைப் பெறலாமென்கிறார்தில். வாடாமலர்கொண்டு நாடோறும் நாடீர் - *மார்வமென்பதோர் கோயிலமைத்து மாதவனென்எந் தெய்வத்தைநாட்டி, ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க்கு* என்று பெரியாழ்வார் ஆர்வத்தைப் பூவாக அருளிச்செய்திருக்கையாலே இங்கு வாடாமலரென்று ஆர்வத்தைச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆத்மபுஷ்பத்தைச் சொன்னதாகவுங் கொள்ளலாம். *அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்* என்று தொடங்கி *ஸத்யமஷ்;டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்* என்பதளவாகச் சொன்ன அஷ்டவித புஷ்பங்களை ஆழ்வார்கள் *கந்தமாமல ரெட்டுமிட்டு* என்றும் *இனமலரெட்டுமிட்டு* என்றும் அருளிச் செய்வதுண்டாகையாலே இங்கு அவற்றையே வாடாமலராகச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம். *செண்மக மல்லிகையோடு செங்கழுநீர்ருவாட்சி முதலிய செவ்விப் பூக்களைக் கொண்டு என்கிற பொருள் உள்ளதே. நாடீர் நாடோறும் என்பதற்கு “பசித்தபோதெல்லா முண்ணுமாபோலே” என்று ஈடு. “அவன்னாமம் சொல்லீர்” என்னாதே ‘பாடீர்’ என்கையாலே *ஏதத் ஸாம காயத் ஆஸ்தே* என்கிறபடியே மேலே பாடுகையாகிற புருஷார்த்தம் இங்குமாகக் கடவதென்று தோற்றுவிக்கப்படுகின்றதென்க. இப்பாட்டில், மனமொழி மெய்களாகிற முக்கரணங்களுக்கும் காரியமிடப்பட்டது; நாடீரென்றது - மாநஸவ்யாபாரம்; மலர்கொண்டென்றது காயிகவ்யாபாரம்; பாடீர் என்றது வாசிகவ்யாபாரம்.

English Translation

Worship him every day, with fresh flowes and sing his name, liberation is here

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்