விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பற்றுஎன்று பற்றி*  பரம பரம்பரனை* 
    மல் திண்தோள் மாலை*  வழுதி வளநாடன்*
    சொல் தொடைஅந்தாதி*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    கற்றார்க்கு ஓர்பற்றாகும்*  கண்ணன் கழல்இணையே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல் திண் தோள் - மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற
இப் பத்தும் கற்றார்க்கு - இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு
மாலை - ஸர்வேச்வரனை
பற்று என்று பற்றி - தமக்குப் புகலாக வுறுதி யிட்டு
கண்ணன் கழல் இணை ஓர் பற்று - கண்ணனது உபயபாதங்கள்

விளக்க உரை

இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். பரமபரம்பர னென்பதனால் ஸர்வேச்வரத்வஞ் சொல்லுகிறது; மல்திண்டோன்மா லென்பதனால் விரோதிகளைப் போக்குகைக் கீடான மிடுக்குடைமையும் அடியார் திறத்து வியாமோஹமுடைமையும் சொல்லுகிறது.

English Translation

This decad of the thousand songs by Valudi-land's Kurugur Satakopan on the Lord of the celestials who has strong wrestling shoulders, Offers shelter of his feet to those who can sing it

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்