விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கு*  வெள்வளை மேகலை கழன்று வீழ*
    தூமலர்க் கண்இணை முத்தம் சோர*  துணைமுலை பயந்து என தோள்கள் வாட*
    மாமணி வண்ணா! உன்செங்கமல  வண்ண*  மெல் மலரடி நோவ நீபோய்* 
    ஆமகிழ்ந்து உகந்துஅவை மேய்க்கின்று உன்னோடு*  அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துணை முலை பயந்து - முலைகளிரணடும் விவர்ணமாகி
ஆங்கு யவன்  கொல் (என்று) - அங்கு என்னாகுமோ வென்று (அதிசங்கை பண்ணி)
தோள்கள் வாட - தோள்கள் வாடும்படியாகவும்
எமது உயிர் - என் ஆத்மாவானது
உன் செங்கமல வண்ணம் மெல் மலர் அடி நோவ - உனது பரமஸுகமாரமான பாதாரவிந்தங்கள் நோகும் படியாக

 

 

விளக்க உரை

கண்ணா! உன்னைப் பிரிந்து படுகிற துக்கம் மாத்திரமேயன்று காண்; தேனுகன் பிலம்பன் காளியனென்எந் தீப்பப்பூடுகள் நிறைந்த விடங்களிலன்றோ நீ திரியப் போவது; அங்கே கம்ஸனேவின ஆஸுரப்ர’ருதிகள் வந்து கூடினால் என்னாகுமோவென்று அதைப் பற்றின கிலேகமும் அளவற்றது காண் என்கிறாள். பிரிவில் தங்களுக்குண்டாகும் தரியாமையைச் சொல்வன முன்னடிகள். விரஹாக்தி யாலே கங்களுயிர் வேவ, ஆச்ரயம் முடிகையாலே வளைகளும் மேகலையும் கழன்று வீழ, கண்கள் அருவி சோர்ந்து மலைகள் பசலை பூத்துத் தோள்களும் வாடும்படியாக நீ பசு மேய்க்கப் போக வொண்ணாது; நாங்கள் எங்கள் மெல்லிய கைகளாலே பிடிக்கும் போதும் கூச வேண்டும்படியான உனது ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டோ நீ நடந்து போவது; போனாலும் வழியேபோய் வழியே வருமவனல்லையே; பசுக்களை மேய்ப்பதிலுண்டான வியாமோஹத்தினால் அவை போமிடமெல்லாம் போய்த்திரிவாய்; அங்குத் தான் எழும்பூண்டெல்லாம் அசுரப் பூண்டாயிருக்குமே, ஐயோ! என்ன அனர்த்தம் விளையுமோ? என்கிறாள்.

English Translation

Our heart melts like wax in fire, our belt has loosened. Out clear eyes form pearly tears, our breasts have paled, our shoulders droop. O Gem-hued Lord, you walk hurting your lotus-soft feet, grazing lovely cows! What if Asuras fell upon you there?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்