விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்-  துயரமும் நினைகிலை கோவிந்தா நின்- 
    தொழுத்தனில் பசுக்களையே விரும்பி*   துறந்து எம்மைஇட்டு அவை மேய்க்கப் போதி*
    பழுத்த நல்அமுதின் இன்சாற்று வெள்ளம்*  பாவியேன் மனம்அகம்தோறும் உள்புக்கு- 
    அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இம்மை துறந்து இட்டு - எங்களை அநாதரித்து விட்டு
கள்வம் பணி மொழி - க்ருத்ரமமான தாழ்ந்த மொழிகளானவற்றை
அவை மேய்க்க போதி - அவற்டிற மேய்க்கப் போகா நின்றாய்
நினைதொறும் - நினைககும் போதெல்லாம்
பழுத்த நல் அமுதின் - பரிப’வமாய்த் தெளிந்த அம்ருதத்தினுடைய
ஆவி வேம் ஆல் - எங்கள் பிராணன் பர்தபிக்கின்றது அந்தோ!
 

விளக்க உரை

உங்களை நான விட்டுப் போவேனோ? பிரியேன், பிரியில் தரியேன், என்று நான் சொன்னதெல்லாம் மறந்தீர்களோ? என்னைப் பிரிந்து நீங்கள் படும் பாடெல்லாம் உங்களைப் பிரிந்து நான் படமாட்டேனோ? என் பிரிவை ஒருவாறு நீங்கள் பொறுத்திருந்தாலும் உங்கள் பிரிவு என்னால் பொறுக்குப போமோ!’’ என்றிப்படி சில வார்த்தைகளைக் கண்ணபிரான் ப்ரணயத்தின் மேலெல்லையில் நின்று சொல்ல; நாயனே! இந்தக் கள்ளப் பணிமொழிகள் தாம் எம்மை நீராயலைந்து கரைய வுருக்குகின்றன வென்கிறார்கள். தொழுத்தையேயாம்... தொழுத்தையோ மென்றம் அடிச்சியோ மென்றும் பரியாயம்; கண்ணா! உனக்கே அற்றுத் தீர்ந்திருக்குமவத்களான எங்களுடைய தனிமையையும், துணைவனான வுன்னைப் பிரிந்தவர்கள் படும் துடிப்பையும் நீ அறிகின்றாயில்லை; பிரிகிறோம் நாங்களெடன்றும் பிரிகிறது உன்னையென்றும் பார்க்கிறாயல்லை. கோவிந்தா! நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்திட்டு அவை மேய்க்கப் போதி... நாராயணனென்பது முதலான திருநாமங்களைத் தவிர்ந்து கோபாலனென்றும் கோவிந்தனென்றும் சில திருநாமங்களை ஆசைப்பட்டு வந்தாய்; அத் திருநாமத்திற்கேற்கு எங்களை யுபேக்ஷித்துப் பசு மேய்க்கையையே விரும்பிக் கடிய வெங்கானிடைக் காலடி நோவச் செல்லா நின்றாய்... என்று ஆய்ச்சியர் சொன்னவாறே, கண்ணன் ’நங்கைமீர் நான் உங்களைவிட்டுப் போவதென்று ஒன்றுண்டோ? போனால் தான் உங்களை மறப்பதுண்டோ? என்னாற்றாமையையும் உங்க ளாற்றாமையும் சீர்தூக்கிப் பார்த்தால் பர்வதபரமாணுவோட்டைவாசி போருமே; மாதாபிதாக்களுக்குப் பரதந்திரனாய் அவர்கள் சொல்லிற்றுச் செய்ய வேண்டுமாகையாலே பசு மேய்க்கப் போகிறேனித்தனையன்றோ. போனாலும் உடல் அங்கும் உயிர் இங்குமாயன்றோ, நானிருப்பது’ என்றப்படி சில நீசபாக்ஷணங்களைப் பண்ணினான்; ஐயோ! இத்தகைய பேச்சுக்களல்லவோ எங்களை ஈர்கின்றன வென்கிறார்கள் பின்னடிகளால். (பழுத்த நல்லமுதின் இத்யாதி) “ நான் போவேனோ? போனாலும் உங்களை மறப்பேனோ?’’ என்றிப்படியாகப் பேசும் பேசசுக்கள் * ஸம்ச்ரவே மதுரம் வாக்யம்* என்னும்படி யிருக்கையாலே பழுத்த நல்ல அம்ருதத்தினுடைய ரஸப்ரவாஹமே இங்ஙனம் சொற்களாக வடிவெடுத்ததோ! என்னும்படியாக உள்ளது இத்தனையும் கள்ளப்பணிமொழியா யிருக்கையாலே அவற்றை நினைக்க நினைக்க ஆவி வேவா நின்றது என்று துடித்துச் சொல்லுகிறபடி.

English Translation

O Govinda, you do not think of our pangs of loneliness, alas! You desire only your cows, you leave us aside and go after them, You false words are like sweet poison running from your ripe berry-lips, They have penetrated my every pore, and kill me every time I recall!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்