விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  விண்கொள் அமரர்கள்*  வேதனை தீர*  முன் 
  மண்கொள் வசுதேவர்*  தம் மகனாய் வந்து*
  திண்கொள் அசுரரைத்*  தேய வளர்கின்றான்* 
  கண்கள் இருந்தவா காணீரே* 
   கனவளையீர் வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விண் கொள் - ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட;
அமரர்கள் - தேவதைகளுடைய;
வேதனை தீர -  துன்பங்கள் தீரும்படி;
முன் - முன்னே;
மண்கொள் - பூமியை இருப்பிடமாகக் கொண்ட;

விளக்க உரை

வானுலகத்தில் வாழும் தேவர்களின் வேதனை தீர மண்ணுலகத்தில் வாழும் வசுதேவரின் திருமகனாகப் பிறந்து வலிமையுடைய அசுரர்கள் தேயும் படி வளர்கின்றான் இந்தக் கண்ணன். இவனது கண்களின் அழகைக் காணுங்கள். பொன்னால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்த பெண்களே காணுங்கள்.
கண்ணன் நல்லவர்களைக் காப்பதற்கும் அல்லவர்களை அழிப்பதற்கும் அவதாரம் செய்கின்றான். அப்படி அவன் அவதாரம் செய்யும் போது சுவர்க்கம் முதலான வானுலகங்களில் வாழும் இந்திரன் முதனான தேவர்களின் துயரங்களை மட்டும் நீக்கவில்லை; மண்ணில் பிறந்து சிறையில் வாடும் தன் தந்தையான வசுதேவர் முதலான நல்லவர்களின் துயரங்களையும் நீக்குகின்றான். 'தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல்' என்று இவனைச் சொல்லுவார்கள்.அதோடு மட்டுமின்றி உடல் பலத்திலும் மனோபலத்திலும் வலிமையுடைய அசுரர்கள் எல்லாம் இவன் வளர்ந்து வரும் போதே தேய்ந்து போகத் தொடங்கினார்கள். 'தேய வளர்கின்றான்' என்று முரண் தோன்ற அழகாக ஆழ்வார் கூறுகிறார்.
இவ்வாறு நல்லவர்களை காக்க அவர்கள் தழைக்கும்படியும் தீயவர்களை அழிக்க அவர்கள் தேயும்படியும் கதிர்மதியமாக ஒரே நேரத்தில் விளங்கும் திருக்கண்களின் திருவழகைக் காணுங்கள் என்று அனைவரையும் அழைக்கிறார் ஆழ்வார்.

English Translation

O Gold-bangled Ladies, come here and see. To end the miseries of the gods in heaven, he has taken birth on Earth as Vasudev’s child, and grows up destroying mighty Asuras. See his eyes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்