விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேசுமின் கூசம்இன்றி*  பெரியநீர் வேலைசூழ்ந்து* 
    வாசமே கமழும் சோலை*  வயலணிஅனந்தபுரம்*
    நேசம்செய்து உறைகின்றானை*  நெறிமையால் மலர்கள்தூவி* 
    பூசனை செய்கின்றார்கள்*  புண்ணியம் செய்தவாறே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெரிய நீர் வேலை சூழ்ந்து - பெரிய நீராகிய கடலாலே சூழப்பட்டு
மலர்கள் தூவி - புஷ்பங்களை பணிமாறி ஆராதிக்குமவர்கள்
வாசமே கமழும் சோலை வயல் அணி - பரிமளமே நிறைந்த சோலைகளையும் வயல்களையும் அலங்காரமாகக் கொண்ட
அனந்தபுரம் - திருவனந்தபுரத்திலே பூசனை செய்கின்றார்கள்
புண்ணியம் செய்த ஆறு   ஏ - புண்ணிய செயத விதம் எனனோ!

விளக்க உரை

திருவனந்தபுரத்திலே சென்று அடிமை செய்வா! என்ன பாக்கியம் செய்தவர்களோவென்று கொண்டாடுகிறார்; இங்ஙனே கொண்டாடுவது ஆச்ரயிப்பார்க்குருசியுண்டாவதற்காக வென்ப. பேசுமின் கூசமின்றி..... இதற்கு இரண்டடிடத்தில் அந்வயங் கொள்ளலாம், அனந்தபுரம் நேசஞ் செய்துறைகின்றானைப் பேசுமின் என்றோ, உறைகின்றானைப் பூசனை செய்கின்றார்கள் புண்ணியஞ்செய்தவாறு பேசுமின் என்றோ அந்வயிக்கலாம். அனந்தபுரம் எப்படிப்பட்டதென்னில், பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமேகமழுஞ் சோலை. கடலில் நாற்றம் மேலிடாதபடி சோலையிற் பர்மளமே விஞ்சியிருக்கப் பெற்றதாம். அத்தகைய திருப்பதியிலே நேசஞ்செய்து உறைகின்றானை... பரமபதத்திலுங் காட்டில் சிறப்பாக ப்£திபண்ணி ஆர்த்தரக்ஷணத்திற்குப் பாங்கான தேமென்று விரும்பி வர்ததியா நின்றான். அவனை, நெறிமையால் மலர்கள் தூவிப் பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே.... * சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபந்தரா நிற்கவே யங்கு* என்கிறபடியே திருநாட்டில் செய்யும் பூசனை ஒரு பூஜையோ? இந்தளத்தில் தாமரை பூத்தாற்போலே இங்குள்ளோர் செய்யும் பூசனையன்றோ புகழத்தக்கதாவது.

English Translation

Speak without fear, he befriends all and reclines there in Tiruvanantapura-Nagar, surrounded by fragrant bowers and fields. By the side of the ocean, they worship him there, with flowers and proper method, O, How fortunate they are!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்