விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்றுபோய்ப் புகுதிராகில்*  எழுமையும் ஏதம்சாரா* 
    குன்றுநேர் மாடம்மாடே*  குருந்துசேர் செருந்திபுன்னை*
    மன்றலர் பொழில்*  அனந்தபுரநகர் மாயன்நாமம்*
    ஒன்றும்ஓர் ஆயிரமாம்*  உள்ளுவார்க்கு உம்பர்ஊரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்று அலர் பொழில் அனந்தபுரம் நகர் - மன்றிலே அலறும் படியான சோலைகளையுடைய திருவனந்தபுரத்தை
ஓர் ஆயிரம் ஆகும் - Nஒன்றே ஆயிரமாகிக் காரியஞ் செய்யும் பெருமையுடையது;
இன்று போய் புகுதிரி ஆகில் - இன்றே சென்றடைவர்களாகில்
உள்உவர்க்கு - இத்தையநுஸந்திப்பார்க்கு
ஒம்பர் ஊரே - அத்திருவனந்புரந்தானே பரமபதமாயிருக்கும்.

விளக்க உரை

திருவனந்தபுரத் தெம்பெருமானுடைய திருநாமமொன்றே ஸஹஸ்ர முகமான ரக்ஷயைப் பண்ணுமென்றார். உலகில் கெட்ட காரியங்களைச் செய்ய நினைப்பவன் ஒரு கணப்பொழுதும் தாமதியாமல் உடனே செய்து முடிப்பதும், அவனே நல்ல காரியமொன்றைச் செய்ய நினைத்தால், பாரிப்போம் பாரிப்போமென்று தாமதித்தே நிற்பதும் இயல்பாதலால் “அனந்தபுர நகர் புகுதும் இன்றே’’ என்று கீழ்ப்பாட்டில் சொல்லியிருந்தும் மீண்டும் “ இன்று போய் புகுதிராகில்’’ என்று விரைவுறுத்துகின்றார். போவோமென்று விருப்பமுண்டான வின்றே போய்ப் புகுவீர்களாகில், ஒரு காலமும் பொல்லாங்கு வந்து கிட்டாது; “நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பரவமெல்லாம், சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே’’ என்றபடியே ’நமக்கு இவ்விடம் ஆச்ரயமல்ல’ வென்று தீயவையெல்லாம் தன்னடையே விட்டகலுமென்கை. திருவனந்தபரம் சென்று புகத்தான் வேணுமோ-? அத்தலத்துப் பெருமானது திருநாமமொன்றைச் சொன்னால் போதுமே; ஒரு திருநாமமே அனேகமுகமாக ரக்ஷகமாம். * ஓராயிரமாயுலகேழளிக்கும் பேராயிரங்கொண்டதோர் பீடுடையன்* என்று கீழுமருளிச் செய்தாரே. “அனந்தபுர நகர் மாயன்னாம முள்ளுவார்க்கு ளும்பருரே’’ என்றதற்கு இரண்டு வகையாகக் கருத்துரைப்பர்; இத்திருநாமஞ் சொன்னால் திருநாடு கிடைக்குமென்றும் இத்தலமே திருநாடாகுமென்றும். இப்பாட்டில் மனோவாக் காயங்களாகின்ற மூன்று உறுப்புகட்கும் தொழில் சொல்லப்பட்டுள்ளமை காண்க; ’போய்ப் புகுதிரி’ எனறதனால் காயிகவ்யாபாரம்; ’மாபன்னாமம்’ என்றதனால் வாசிகவ்யாபாரம்; ’உள்உவார்க்கு’ என்றதனால் மாநஸிகவ்யாபாரம்.

English Translation

It we go now, despair will not brother us for seven lives, Mansions rise like mountains, the flowers of kurundu, serundi and punnai trees spread their fragrance in Tiruvananatapura-Nagar, the celestial city for those who take his one name in the thousand

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்