விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாம்அடைந்த நல்அரண்*  நமக்குஎன்று நல்அமரர்* 
    தீமை செய்யும் வல்அசுரரை*  அஞ்சிச் சென்றுஅடைந்தால்*
    காமரூபம் கொண்டு*  எழுந்துஅளிப்பான் திருமோகூர்* 
    நாமமே நவின்று எண்ணுமின்*  ஏத்துமின் நமர்காள்! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எழுந்து அளிப்பான் - கிளர்ந்து ரக்ஷிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் - தங்களுக்குப் பொல்லாங்கு அஞ்சி வந்தது பணிந்தால்
காமரூபம் கொண்டு - திருவுள்ளமான வடிவைக் கொண்டு
திருமோகூர் நாமமே - திருமோகூரிப்பதியின் பெயரையே
நமர்காள நவின்று எண்ணுமின் ஏத்துமின்     -   நம்முடையவர்களே! பயின்று நினையுங்கோள், வாய் விட்டுமேந்துங்கள்

விளக்க உரை

அடியார்களின் விஷயத்தில் அபீஷ்டவிக்ரஹ பர்க்ரஹம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பெருமான் வர்த்திக்கிற திருமோகூர்த் திருப்பதியின் திருநாமத்தைச் சொல்லி ஏத்துங்கோ என்று, தம்மோடு அந்வயமுடையார்க்கு உரைத்தருளுகிறார். நல்லமரர், தீமை செய்யும் வல்லசுரரையஞ்சி, நமக்கு நாமடைந்த நல்லரணென்று சென்றடைந்தால், காமரூபங்கொண்டு எழுந்தளிப்பான் என்று அந்வயிப்பது. அசுரர்கள் எப்போதும் அமரர்கட்குத் தீங்கிழைத்துக் கொண்டே இருப்பாகளாதலால் அவர்கட்கு அஞ்சி எம்பெருமானிடம் வந்து ’ நமக்கு நாமடைந்த நல்லரண்’ ( நமக்கு அஸாதாரணமாக நாம் பற்றின விலக்ஷணமான அரண்) என்று கொண்டு வந்தடைகின்ற நல்லமரர்கட்காக, காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான். அடியாருடைய ஆபத் ரக்ஷணதநுரூபமாக வேண்டினபடி பர்க்ரஹிக்கும் திருமேனிக்குக் காமரூபம். அதைக் கொண்டு புறப்பட்டு ரக்ஷிக்குமவன் வர்த்திக்கிற திருமோகூர். இவ்வூர்ன் பெயரை வாயாலே சொல்லி யநுஸந்தித்து அன்பு மிகுதியினால் ஏத்துங்கோள் நம்முடையவர்களே! என்றாயிற்று.

English Translation

Good celestials, -fearing the wicked Asuras, -seek the Lord who takes the desired form in which you see him, and protects you. The Lord in Tirumogur is our fortress forever. O People, come then, let us praise his names in joy!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்