விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூத்தன் கோவலன்*  குதற்று வல்லசுரர்கள் கூற்றம்* 
    ஏத்தும் நங்கட்கும்*  அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*
    வாய்த்த தண்பணை வளவயல்சூழ்*  திருமோகூர்- 
    ஆத்தன்*  தாமரை அடிஅன்றி*  மற்றுஇலம் அரணே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோவலன் - பசுக்களின் பின்னே சென்று அவற்றை ரக்ஷிக்குமவனாய்
குதற்று வல் அசுரர்கள் கூற்றம் - பீடையைப் பண்ணும் கொடிய அசுரர்களுக்கு மருத்யுவாய்
தாமரை அடி அன்றி - பாதாரவிந்தங்களைத் தவிர்த்து
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவாக்கும் இன்பன் - துதி செய்கின்ற நமக்கும் தேவர்களுக்கும் இருடிகளுக்கும் ஆனந்தகரனாய்
மறறு அரண் இலம் - மற்றொரு ரக்ஷையுடையோ மல்லோம்.

விளக்க உரை

நடராஜனென்று பேர் பெற்ற தேவதாந்தரம் போலே கூத்தாடுகிறவனல்லன்; நடை நடக்குமழகே கூத்தாடினாற் போலே நெஞ்சைக் கவரும் தாயிருக்குமென்ப. இங்கு ஈட்டில் “ நடக்கப்புக்கால் வல்லாராடினாப் போலே யுருக்கை’’ என்றருளிச் செய்து உடனே * அக்ரதா ப்ரயயௌ ராமா:* என்கிற ஸ்ரீ ராமாயணப்ராணம் காட்டப்பட்டுள்ளது. இந்தப்ரமாணத்தில் யயௌ என்னாமல் ’ப்ரயயௌ’ என்றதனால் நடையில் விசேஷம் காட்டப்பட்டதென்று நம்பிள்ளை திருவுள்ளம், இந்த நடையழகு இராமபிரானிடத்திலன்றிக்கே கண்ணபிரானிடத்தும் காணலாயிருக்கையாலே கோவலன் என்கிறது : * கானகம் படியுலாவியுலாவிக் கருஞ்சிறுக்குன் குழலூதின போது, மேனகையோடு திலோத்தமையரம்பை உருப்பசியரவர் வெள்கி மயங்கி, வானகம்பாடியில் வாய்திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே* என்ற பெரியாழ்வார் திருமொழியை இங்கே யோஜிப்பது. குதற்று வல்லசுரர்கள்... ஜாதியோ அஸுரஜாதி, அதிலும் வல்லசுரர்.... வன்மையே வடிவெடுத்தவர்கள், அதற்கு மேல், குதற்று வல்லசுரர்கள்...ஸாதுக்களுக்குப் பீடைகள் செய்வது தவிர வேறு தொழிலற்றவர்கள், அப்படிப்பட்டவர்களுக்குக் கூற்றம்... மிருத்யுவாயருப்பவன் எம்பெருமான். ஏத்தும் நங்கட்கு மமரர்க்கும் முனிவர்க்குமின்பன்...இன்று ஆச்ரயியக்கிற நமக்கும் நித்ய ஆச்ர்தர்களானார்க்கும் இன்பனாமிடத்தில் வாசியற்றிருப்பவன். வாசியற்றிருக்கை மட்டுமின்றிக்கே, இன்பனாமிடத்தில் முந்துற முன்னம் நமக்கு இன்பனாம் என்கிற விசேஷமும் குறிக் கொள்ளத்தக்கது. இப்படிப்பட்ட எம்பெபருமான் திருமோகூராத்தான்....ஆத்தனென்றது ஆப்த னென்ற வடசொல்விகாரம்; பரமபந்து என்றபடி. ஈட்டு ஸ்ரீ ஸூக்தி காண்மின்; “தான் தனக்கல்லாத மரணஸமயத்தில்* அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி* என்னும் பரமாப்ததமன்’’.... இப்படிப்பட்ட பெருமானுடைய தாமரையடியன்றி மற்று அரண் இலம்.. வேறு சிலரை ரக்ஷகராகவுடையோமல்லோம். இலம் இல்லோம்.

English Translation

Gopala the pot-dancer is deadly to the Asuras and sweet to us, -his devotees, gods and seers as well. Cool and fertile groves and fields extend all around Tirumogur. Other than the lotus feet of our Attan we have no refuge

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்