விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொண்டீர்! வம்மின்*  நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்* 
    அண்டம் மூவுலகு அளந்தவன்*  அணி திருமோகூர்*
    எண் திசையும் ஈன்கரும்பொடு*  பெரும்செந்நெல் விளையக்* 
    கொண்ட கோயிலை வலஞ்செய்து*  இங்கு ஆடுதும் கூத்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெரு செந்நெல் விளைய - பெரிய செந்நெற் பயிர்கள் விளையும்படியாக
ஒரு தனி முதல்வன் - உலகுககெல்லாம் அத்விதீய காரண பூதனாய்
கொண்ட - தான் பர்கரஹித்தருளின
கோயிலை - ஸன்னிதியை
வலம் செய்து - பிரதக்ஷிணம் பண்ணி

விளக்க உரை

“தெண்டீர் வம்மினே’’ என்று கீழ்ப்பாட்டிற் சொல்லியிருந்தும் மீண்டும் தொண்டீர்வம்மின்’’ என்கிறார்... அந்தாதித் தொடைக்காகவன்று, *ஏ: ஸ்வாது ந புஞ்ஜீத்* என்றும்* இன்கனி தனியருந்தான்* என்றும் சொல்லுகிறபடியே தொண்டர்களில் ஒருவரும் இவ்வநுபவத்தை இழக்கலாகாததென்கிற உத்கண்டையாலே மீண்டு மீண்டு மழைக்கிறபடி. திருமோகூரை வலஞ்செய்து கூத்தாடலாம் வாருங்கோ என்றழைக்கிறார். அங்குறையும் பெருமானெப்படிப் பட்டவனென்னில், நஞ்சுடரொளி ஒரு தனிமுதல்வன்...சுடரொளி மிக்க தன்வடிவழகையும் முதன்மையையுங் காட்டி நம்மை யீடுபடுத்திக் கொண்டவனென்கை. அண்ட மூவுலகளந்தவன்...கீழே’ ஒரு தனி முதல்வன்’ என்பதனால் படைப்பவனென்றது, படைத்து விட்டு விடுகையன்றிக்கே படைத்த ஜகத்தை வலியார் அபஹர்த்தால் எல்லை நடந்து கொண்டு ரக்ஷிக்கு மவனென்கிறது அண்ட மூவுலகளந்தவனென்பதனால், கொண்ட கோயில்... தன் திருவுள்ளத்தாலே உகந்து பர்க்ரஹித்த திவ்யதேசமென்றபடி. வலஞ்செய்வதும் கூத்தாடுவதும் பக்தர்களின் பணியாதலால் அது செய்யவழைக்கிறபடி.

English Translation

Come devotees, let us go around the temple dear to use. Sugarcane and paddy grow ripe and fall in fields, in Tirumogur where he resides. He is the first-cause of all. Come then, let us dance in joy, for the measured the Earth!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்