விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சரணம்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    மரணம்ஆனால்*  வைகுந்தம் கொடுக்கும்பிரான்*
    அரண்அமைந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத் 
    தரணியாளன்*  தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தனதாள் அடை ந்தார்க்கு – தனது திருவடிகளை உடைந்தவர்களுக்கு
சரணம் எல்லாம் ஆகும் – ஸகலவித ரக்ஷசனுமாய்
மாணம் ஆனால் – இந்த தேஹம் விட்டு நீங்கினவுடனே
வைகுந்தம் கொடுக்கும் – பரமபதமளிக்கும் பெருமானுமாய்பிரான்
திருக்கண்ணபுரம் – திருக்கண்ணபுரமாகிற

விளக்க உரை

இப்பதிகத்திற்கு இப்பாட்டே உயிராயிருக்கும்; "ஆழ்வீர்! உமக்கு மரணமாகும் வைகுந்தம் கொடுக்கடவேன்" என்று எம்பெருமானருளிச் செய்ததையே "மரணமானால் வைகுந்தங் கொடுக்கும் பிரான்" என்கிற சொல்நயத்தாலே வெளியிட்டருளுகிறார் இவ்வுடன் முடியுந்தனையும் பொறுத்திரும் ; முடிந்தவுடன் ப்ராப்த மருமங்கள் முடிந்தளனமாக கொண்டு, ஸஞ்சிதாருமங்களை க்ஷமைக்கு விஷயமாக்கி இவ்வளவோடே ஜன்ம பரம்பரையை முடித்து விட்டு பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனியாமுறாமை என்று நீர் முலடியிலே பிரார்த்தித்தபடியே செய்து தலைக்கட்டுவேன் என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமானருளிச் செய்தது இங்கு அநுபாஷிக்கப்பட்டதாயிற்று. "மரணமாக்கி வைகுந்தங் கொடுக்கும் பிரான்" என்று ஆழ்வாரருளிச் செய்திருந்தாரென்றும், அது அச்லீலமாயிருக்கிறதென்று கருதிய ஸ்ரீமந்நாதமுனிகள் போல்லார் அப்பாடத்தைமாற்றி "மரணமானால்" என்று ப்ரவசனம் செய்தருளின ரென்றும் சிலர் சொல்லிவருவது ஆதாரமற்ற அஸம்பத்தமான ஐதிஹயம். வியாக்கியான ரீதிக்கு அது நெஞ்சாலும் நினைக்கத்தக்கதன்று "மரணமாக்கி" என்று பாடமிருந்தால் அது "அருளுடையவன் தாளணைவிக்கும் முடித்தே" என்ற பாசுரத்தோடொக்குமாதலால் அறை மாற்ற வேண்டிய அவச்யமேயில்லையா மென்று தெளிக. "அரண் அமைந்த மதிள்சூழ்" என்ற விசேஷணத்தினால் ஆழ்வார் தம்முடைய அச்சத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறார்; நித்யஸுரிகள் பரியவிருக்கின்றவன் இங்கே நின்றானே ! இவனுக்கு என் வருகிறதோவென்று அஞ்சவேண்டாதிருக்கை. தரணியாளன்–தரணியென்று பூமிக்குப்பெயராய், பூமியிலுள்ள ஸம்ஸாரிகளை ஆட்கொள்ளுபவன் என்றதாம். தனதன்பர்க்கு அன்பாகும்= 'தம்மையுகப்பாரைத் தாமுகப்பர்' என்றபடி. 'அன்பர்க்கு அன்பனாகும்' என்ன வேண்டுமிடத்து அன்பாகும் என் கையாலே எம்பெருமான் அன்பையிட்டே நிரூபிக்க வேண்டும்படி யாவன் என்பது பெறப்படும்.

English Translation

To all those who seek him, he gives refuge here and Vaikunta upon death, He lives for the love of devotees in Tirukkannapuram with high walls.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்