விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்அவிழும் மலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்* 
    நள்ளிசேரும் வயல்சூழ்*  கிடங்கின்புடை*
    வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    உள்ளி*  நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கள் அவிழும் மலர் – தேனொழுகுகின்ற புஷ்பங்களைப் பணிமாறி
இறைஞ்சுமின் – வணங்குங்கள்
நள்ளி சேரும –  பெண் நண்டுகள் களித்த வாழப்பெற்ற கழனிகள் சூழ்ந்த
வயல் சூழ் கிடங்கின் – அகழ்களைப் பக்கங்களிலே யுடையதும்புடை
வெள்ளி ஏய்ந்த மதின் சூழ் – சுக்கிரனைத் தொட்டுக் கொண்டிருக்கிற மதிள்களாலே சூழப்பட்டதமான

விளக்க உரை

"கள்ளவிழும் மலரிட்டு இறைஞ்சுமின் "என்று அருளிச் செய்கையாலே இன்ன மலரென்று ஒரு நிர்ப்பந்தமில்லை யென்பது காட்டப்படும். கீழ்ப்பாட்டில் "கமல மலரிட்டு " என்றது– கமல மலரேயாக வேணுமென்றும் அதுபோன் சிறந்த மலரேயாக வேணுமென்றும் காட்டினபடியன்று என்பதை இப்பாட்டில் தெளியவைத்தாராயிற்று. வாடிவதங்கிப் போன மலரன்றிக்கே அப்போதலர்ந்த மலரென்கிறது கள்ளவிழும் என்ற அடைமொழியினால். "அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ; ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத ; த்யாநம் புஷ்பம் தப ; புஷ்பம் ஜ்ஞாநம் புஷ்பம் தவைத ச, ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்னோ ; ப்ரீதிகரம் பவேத் " என்று பகவச்சரஸ்த்ரங்களிற் சொல்லப்பட்ட அஷ்டவித புஷ்பங்களைச் சொன்னபடியாகவுமாம். (வெள்ளியேய்ந்த மதிள்சூழ்) இதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர் (1) வெள்ளியென்று சுக்ரனுக்குப் பேராகையாலே சுக்ரனைச் சொன்னது நக்ஷத்ரஸாமான்யத்தைச் சொன்னபடியாய் நக்ஷத்ரமண்டலத்தளவும் ஒங்கின மதிளையுடைத்தான திருக்கண்ணபுரம் (2) வெள்ளியாலே (ரஜதத்தாலே) சமைந்த மதிள் என்றுபாம் (3) வெள்ளிபோலே சுப்ரமாயிருக்கின்ற மதிள் என்றுமாம். நக்ஷத்ரபதத்தளவுமோங்கின மதிளென்றோ, வெள்ளியாலே சமைக்கப்பட்ட மதிளென்றோ சொல்லும் பக்ஷத்தில் இது பொய்யுரையாகாதோவென்று சிலர் சங்கிக்கக் கூடும். இத்தகைய ப்ராசாரஸம்ருத்தியுண்டாக வேணுமென்று ஆசம் ஸித்தருளிச் செய்கிதாகையாலே குறையொன்றுமில்லை யென்க.

English Translation

Strew nectared flowers and worship him everyday. O, Devotees, keep him in your heart always. The Lord resides in Tirukkannapuram where walls touch the sky, beside fertile fields and tanks filled with crabs

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்