விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாவியேன் மனத்தே நின்றுஈருமாலோ!*  வாடை தண்வாடை வெவ்வாயாலோ* 
    மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!*  மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*
    தூவிஅம் புள்உடைத் தெய்வ வண்டுதுதைந்த*  எம்பெண்மைஅம் பூஇதுதாலோ* 
    ஆவியின் பரம்அல்ல வகைகள்ஆலோ!*  யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெம் வாடை ஆல் ஓ – நெருப்பை யுமிழும் வாடையாயிரா நின்ற தந்தோ
மேவு தண் மதியம் – விரும்பிப் பார்க்கப்படுகிற  குளிர்ந்த சந்திரனும்
வெம் மதியம் ஆல் ஓ – உஷ்ணகிரணனான சந்திரனானானந்தோ
மெல் மலர் பள்ளி – ம்ருதுவான புஷ்ப சயனமும்
வெம் பள்ளி ஆல் ஓ – நெருப்புப்படுக்கை யாயிற்றந்தோ

விளக்க உரை

"பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ !" என்று கீழ்ச் சொன்னது தன்னையே அநுபாஷிக்கிறபடி ஈரும் என்பதற்கு எழுவாய் எது வென்னில், கீழ்ச்சொன்ன வடிவழகேயாம். மேலுள்ள வாடை என்பதை எழுவாயாக்கி யுரைப்பர் பன்னீராயிரவுரைகாரர். வாடை தண்வாடை வெவ்வாடையாலோ=தண்வாடை வெவ்வாடையாலோ என்றால் போதுமே; 'வாடை தண்வாடை' என்னவேணுமோ வென்னில் ; மகள் வாடை!; என்று வெறுத்துச் சொன்னாள்; தாய்மார் 'வெறுப்பானேன்? இது தண்வாடையன்றோ' என்றார்கள் ; ஐயோ! வெவ்வாடையைத் தண்வாடை யென்பதே! என்கிறாள் மகள். மேவுதண்மதியம் வெம்மதியமாலோ=தாபதப்தர்கள் சந்திரனைத் தேடா நிற்பர்கள்; அவன்தானே எனக்கு நெருப்பைச் சொரியா நின்றான் *சந்திரச் சண்டகராயதே* என்பர் வடநூலாரும். மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ–தாபம் பொறுக்க மாட்டாமையாலே பூம்படுக்கையிலே படுத்தால் அது நெருப்புப் பள்ளியாய்ச் சுடாநின்றது. இருவராய்ப் படுக்க வேண்டிய படுக்கை ஒருவருக்கு நெருப்பாகச் சொல்லவேணுமோ? நாண் மடமச்சம் முதலிய குணங்களோடு கூடியிருக்க வேண்டிய பெண்கள் இப்படியும் பேசத்தகுமோ? என்ன; பெண்மை குடிவாங்கிப் போறிறென்கின்றாள் மூன்றாமடியில். வண்டானது பூவினுள்ளே புகுந்து படிந்து அங்குள்ள ஸாரத்தைக் கவர்ந்து போயிற்றே யென்கிறாள். எம்பெருமானிடத்தே யீடுபட்டவர்களும் பெண்மையைக் காக்க முடியுமோ வென்று கருத்து. பறவை யேறுபரம்புருடன் வந்து கைக் கொண்டு என் பெண்மையை யழித்துப் போனானென்கை. ஆவியின் பரமல்ல வகைகளாலோ= அவனுடைய ஸம்ச்லேஷ விச்லேஷப்ரகாரங்கள், ஆவியின் பரமல்ல வகைகளாலோ=அவனுடைய ஸம்ச்லேஷ சிலேஷ ப்ரகாரங்கள், பாதக பதார்தங்களின் பாரிப்பு ஆகிய எல்லாம் இங்கு வகைகள் என்று சொல்லாற் சொல்லப்படுகின்றன. இனை என் ஆத்மா பொறுக்கக் கூடிய அளவிலே யில்லை யென்கை. யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ–உசாத்துணையான நெஞ்சையு மிழக்கப்பெற்றேனென்கை.

English Translation

Alas! A great big beetle came on Garuda-wings, fed on this flower's femininity and left. Now the cool breeze blows hot and scorches my sinful heart. Even the cool Moon so desirable, and the soft bed of flowers feel hot. Alas, even my heart is no companion; more than this I cannot bear!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்