விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அந்தோ! அணுகப்பெறும்நாள்*  என்றுஎப்போதும்*  
    சிந்தை கலங்கித்*  திருமால் என்றுஅழைப்பன்*
    கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வந்தே உறைகின்ற*  எம்மா மணிவண்ணா!.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நொந்து ஆர் – கொத்தாக நிறைந்துள்ள
மலர் சோலைகள் சூழ் – மலர்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட
திருநாவாய் – திருநாவாய்ப்பதியிலே
வந்தே உறைகின்ற – பரமபதம் முதலான விடங்களையும் விட்) வந்து நித்யவாஸம் பண்ணுகிற
எம் மா மணி வண்ணா–எமக்குப் பரமபோக்யனான நீல மணிவண்ணனே!

விளக்க உரை

உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சழிந்து கூப்பிடா நின்றேன் காணென்கிறார். தொடங்கும்போதே அந்தோவென்கிறார்– சொல்லத் தொடங்கினது தலைக்கட்ட மாட்டாத பலஹானியாலே. "அணுகப் பெறுநாள் எவைகொல் " என்ன வேண்டியிருக்க அவ்வளவும் சொல்லமாட்டிற்றிலான்றோ. (எப்போதும்) ஒருகால் சொல்லத் தொடங்கி இளைத்தால் பின்னைத் தவிரலாமே, ஆசை வாளாவிருக்க வொட்டுகிற தில்லை. எப்போதும் இதுவே யாத்திரையானபடி. (சிந்தை கலங்கித் திருமாவென்றழைப்பன்)–அத்தலைக்குத் திருவுள்ள மில்லையாகில் நாம் அழைப்பதனால் என்னாகும்? என்கிற தெளிவின்றிக்கே சிந்தை கலங்கியிருக்கப் பெற்றவனாகையாலே திருமாலே யென்று கூப்பிடுகின்றேன். திருநாட்டிலே வந்து காணக் கடலவதான வடிவை இங்கே காட்டுவதாகக் கொண்டு திருநாவாயிலே வந்து நித்யவாஸம் பண்ணுமவனெ!

English Translation

My heart is disturbed with thought of impending union. Alas, I call my gem-hued Lord who lives in fragrant Tirunavai

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்