விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேவர் முனிவர்க்குஎன்றும்*  காண்டற்குஅரியன்* 
    மூவர் முதல்வன்*  ஒருமூவுலகுஆளி*
    தேவன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    யாவர் அணுகப்பெறுவார்*  இனிஅந்தோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவர் முனிவர்க்கு – தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்
என்றும் காண்டற்கு அரியன் – (ஸ்வப்ரயத்நத்தினால்) எப்போதும் காணமுடியாதவனாய்
மூவர் முதல்வன் – பிரமன் சிவனிந்திரக்கும் ஸத்தோஹேது பூதனாய்
ஒரு மூவுலகு ஆளி – மூவுலகங்களையும் நீர்யஹிக்கு மாவனான
தேவன் – எம்பெருமான்

விளக்க உரை

தாம் இப்படிச் சொல்லச் செய்தேயும் ஒரு விசேஷ கடாக்ஷம் செய்தருளாமையாலே 'நான் இவ்வாசையோடே முடியா நின்றென். என்னுடைய அபிமதத்தைப் பெற்றுக்களிக்கப் போகிற பாக்யவான்கள் யாரோ?' என்கிறார். (தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்) பிரமன் முதலிய தேவர்களுக்கும், ஸநக ஸநந்தநாதிகளான யோகிகளுக்கும் கூட தாமாகக் காண நினைக்கில் காண வரியனாயிருக்குமவன். மூவர் முதல்வன்–அரி அயன் அரன் என்று சொல்லப்படுகிற மூவர்க்குள்ளே முதன்மை பெற்றிருப்பவன் என்றும், பிரமன் சிவனிந்திரன் என்றும் மூவர்க்கும் நிர்வாஹகன் என்று முரைப்பர். ஒரு மூவுலகாளி–மூவுலகங்களையும் தன் ஸங்கல்பத்தாலே நிர்வஹிக்குமவன். ஆக இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தேவன் ஆச்ரித ரக்ஷணத்திற்குப் பாங்கான தேசமிதுவென்று விரும்பிறையுமிடமான திருநாவாய்ப்தியை நானணுகபெறாதே முடியாநின்றேன். இனிப் பெறுவார் ஆரோ? திருநாவாயில் சென்று ஸேவிக்கவேணுமென்று ஆழ்வார்க்கு நினைவாகில் இதில் அருமையொன்றுமில்லையே; புறப்பட்டுச் சென்று ளேவிக்கத் தட்டென்? என்று சிலர் சங்கிக்க்கூடும். திருநாவாயை அணுகப் பெறவேணுமென்பதே உத்தேச்யமன்று; அவ்விடத்திதுறையும் பெருமானுக்கு அஸாதாரணமான திருநாடுதான் இங்கு உத்தேசம்.

English Translation

The Lord of Tirunavai, by his will, is eternally invisible to gods and to sages, Now who can be with him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்