விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை* 
    ஒழிவுஇல்லா அணிமழலைக்*  கிளிமொழியாள் அலற்றியசொல்* 
    வழுஇல்லா வண்குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
    அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்*  நோய் அறுக்குமே   (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒழிவு இன்றி – நிரந்தரமாக
திருமூழிக்களத்து உறையும் – திருமூழிக்களத்திலே வாழ்கிற
ஒண் சுடரை – தேஜோமூர்த்தியான எம்பெருமானை
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழி யாள் அலற்றிய சொல் – மபிரிந்து தரிக்கமாட்டாத வொரு மென்கிளிமொழித் தலைவி சொன்ன சொல்லாகவைத்து
வழு இல்லாவண் குருகூர் சடகோபன் உரைத்த – அன்பில் குறைவில்ல தவரான ஆழ்வார் ஆழ்ந்து அருளிர் செய்க

விளக்க உரை

இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். திருமூழிக்களத்து ஒழிவின்றியையும் ஒண்சுடரை=எம்பெருமான் ராமகிருஷ்ண யவதாரங்கள் பண்ணியிருந்து ஒரு காலவிசேஷத்திலே தன்னடிச் சோதிக்கு எழுந்தருளியாகிறது. அர்ச்சாவதாரம் அப்படியன்றே. 'ஸம்ஸாரம் கிழங்கெடுத்தலல்லது பேரேன்' என்றிருக்குமிருப்பாகையாலே அழிவின்றியுறையு மென்கிறது. திருநாட்டில் விளங்கப்பெறாத திருக்குணங்களும் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது இங்கே யாதலால் ஒண்சுடரை என்றது. இரண்டாமடியில் அணிமழலைக் கிளிமொழியாள் என்றது ஆழ்வார் தம்மையன்று எம்பெருமானைப் பிரிவில் தரிக்கமாட்டாத ஸ்வபாவையாயிருப்பாளொரு பிராட்டி அவனைப் பிரிந்து அவற்றின பாசுரத்தாலே, தத்ஸத்ருசஸ்வபாவரான வண்குருகூர்ச்சடகோபன் எம்பெருமானைப் பிரிந்தலற்றின இப்பத்து என்பது ஆறாயிரப்படிய்ருளிச் செயல்.

English Translation

This decad of the thousand songs by prosperous kurugur's Satakopan praising with sweet parrot-like words the radiant Lord of Tirumulikkalam, will cure sickness

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்