விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எனக்குஒன்று பணியீர்கள்*  இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*  
    மனக்குஇன்பம் படமேவும்*  வண்டுஇனங்காள்! தும்பிகாள்* 
    கனக்கொள் திண்மதிள்புடைசூழ்*  திருமூழிக் களத்துஉறையும்*  
    புனக்கொள் காயாமேனிப்*  பூந்துழாய் முடியார்க்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரு பொழில் வாய் – பெரிய சோலையிலே
இரை தேர்ந்து – இரையான மதுவைத்தேடிக் கொண்டு
மனக்கு இன்பம் பட மேவும் – மனதுக்கு இனிமையுண்டாம்படி கலந்துவர்த்திக்கிற
வண்டு இனங்கன காள் தும்பிகாள் – வண்டுகளே ! தும்பிகளே !
கனம் கொள் திண் மதின் புடை சூழ் – கனத்துத் திண்ணிய மதிவாலே சுற்றும் சூழப்பட்ட

விளக்க உரை

அவருடைய வடிவழகுக்கு என்ன அபாயம் நேருகிறதோவென்று அஞ்ச வேண்டாதபடி. ஸீரக்ஷிதாமாக வொரு திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருந்தார்; இனி நம்முடைய ஆர்த்தி தீர்க்குமத்தனையே வேண்டுவது; ஆன பின்பு என்னுடைய ஆர்த்தியை அறிவியுங்கோளென்று சில வண்டுகளையும் தும்பிகளையுங்குறித்துச் சொல்லுகிறான். ஆறாயிரப்படி காண்மின்; – "வண்டினங்காள் தும்பிகாள்! உன்னழகைக் காணப்பெறாதே அவளிழந்துபோமித்தனையோ வென்று சொல்லிகோளென்கிறான்" என்று. எனக்கு ஒன்று பணியீர்கள்=அத்தலையில் சென்று எனக்காக வொருவார்த்தை சொல்லுங்கோள; நீங்கள் ஒரு வார்த்தை சொல்லாவிடில் முடியும்படியான நிலைமையன்றோ என்னுடையது, [இரும்பொழில்வாய் இத்யாதி] நீங்கள் மாத்திரம் இன்புற்றிருந்தால் போதுமோ? பிறரை வாழ்விப்பதன்றோ உங்களுடைய வாழ்ச்சி. மனக்கு–மனத்துக்கு; அத்துச்சாரியை பெறாதசொல். யாரிடத்திற்சென்று என்ன வார்த்தை சொல்லவேணு மென்ன; [கனக்கொள் இத்யாதி] கனத்துத் திண்ணிய மதிள்சூழ்ந்த திருமூழிக்கனத்திலே ரக்ஷணத்திற்குத் தனிமாலையிட்டிருக்கும் பெருமானுடைய புனக்கொள் காயாமேனியிலே[வடிவழகிலே] எனக்குள்ள விருப்பத்தைச் சொல்லுங்கோளென்றபடி.

English Translation

O Bumble bees and beetles hovering over large flowers! Speak in my favour to the Lord, your words are sweet to the heart. He resides in the hue of kaya flowers, and wears Tulasi blossoms

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்