விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆருயிர் பட்டது*  எனதுஉயிர் பட்டது* 
    பேர்இதழ்த் தாமரைக்கண்*  கனிவாயதுஓர்*
    கார்எழில் மேகத்*  தென்காட்கரை கோயில்கொள், 
    சீர்எழில் நால்தடம்தோள்*  தெய்வ வாரிக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேர் இதழ் தாமரை கண் – பெரிய விதழை யுடைய தாமரை போன்ற திருக்கண்களையும்
கனி வாயது ஓர் – கனிபோந் சிவந்த வாயையுமுடைத்தா யிருப்பதொரு
சார் எழில் மேகம் – கறுத்தழகிய மேகம் போன்ற வாயையுடையவனாய்க் கொண்டு
தென்காட்கரை கோயில்கொள் – திருக்காட்கரையை உறைவிடமாகக் கொண்ட
சீர் எழில் நால் தட தோள் – அழகுமிக்க நான்கு திருத் தோள்களையுடையனாய்
தெயவம் வாரிக்கு – தெய்வங்களுக்குக் கடல் போன்வனான பெருமானுக்கு

 

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் "ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது" என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஊடுபட்டவர்களான எல்லார்க்குமே இது ஸஹஜந்தானே ; உமக்கு மாத்திரம் அஸாதாரணமோ ! என்று சில் கேட்பதாகக் கொண்டு நான் பட்டது யாரும் பட்டிலரென்கிறாரிப்பாட்டில். எனுயிர் பட்டது ஆருயிர் பட்டது?=நான் பட்ட பாட்டை நித்யஸுரிகளிலேதான் பட்டாருண்டோ? குணுநுபவனே யாத்ரையான நித்யஸுரிகளும் இப்பாடு பட்டிலரே. "இங்கு எனதுயிர் பட்டது அங்கு ஆருயிர் பட்டது" என்று எம்பெருமானாரருளிச் செய்வாராம். ஆழ்வாருடைய உயிர்அழிந்தற்கு ஹேதுக்களைச் சொல்லுகிறது மேல்; [பேரிதழ்த் தாமரைக்கண் கணிவாயதோர்] திருக்கண்களும் திருவதரமும் படுத்தினபாடு [காரெழில்மேகத் தென்காட்கரை கோயில் கொள்] வடிவுபடுத்தின பாடும் கோயில் படுத்தின பாடும் [சீரெழில் நாற்றடந்தோள்] கற்பகக் காவன நற்பல தோள்கள் படுத்தின பாடு. தெய்வவாரி–எம்பெருமானுக்கு ஆழ்வாரிட்ட திருநாமங்களுள் இதுவுமொன்று; வாரி யென்னும் வட சொல் ஜலத்தைச் சொல்லுமதானாலும் ஜலநிதியான கடலைக் குறிக்குமிங்கு. தைவங்கள் படுங் கடல்; தைவங்களுக்கு உத்பாதகன்றபடி. "தெய்வவாரிக்கு எனதுயிர் பட்டது ஆருயிர் பட்டது" என்று அந்வயம்.

English Translation

My dark hued Lord at Tirukkatkarai has lotus eyes and coral lips, four arms and a godly radiance. Which other soul does he torture like he does mine?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்