விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உருவாகிய*  ஆறுசமயங்கட்குஎல்லாம்* 
    பொருவாகி நின்றான்*  அவன் எல்லாப்பொருட்கும்*
    அருவாகிய ஆதியை*  தேவர்கட்குஎல்லாம்* 
    கருவாகிய கண்ணனை*  கண்டுகொண்டேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உரு ஆகிய – மேலெழுந்த பார்வையில் ஒன்று போலே தோற்றுகிற
ஆறு சமயங்கட்கு – புறமதங்களான அறு சமயங்களுக்கும் எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன் – தடையாகி நிற்பவனும்
எல்லா பொருட்கும் அரு ஆகிய ஆகியை – ஸகல பதார்த்தங்களுக்கும் உயிர் நிலையாய்க் கொண்டு முதல்வனும்
தேவர்கட்கு எல்லாம் கரு ஆகிய – எல்லாத் தேவர்களுக்கும் காரண பூதனாமான

விளக்க உரை

கீழிரண்டு பாட்டுக்களிலுண்டான களிப்பே இப்பாட்டிலும் தொடர்ந்து செல்லுகின்றது. ஆறுசமயங்கட் கெல்லாம் பொருவாகிநின்றா னென்றதின் கருத்தை ஆறாயிரப் படியில் விவரித்தருளுகிறார்–"வேதபாஹயமான ஷட்ஸமயங்களில் நான் புகாதபடி பரி ஹரித்து" என்று. அந்த பாஹயமதங்களினால் தன்னை இல்லைசெய்ய வொண்ணாதபடி நிற்பவன் என்பது நம்பிள்ளை காட்டின கருத்து. பாஹயஸமயங்களினால் அசைக்க வொண்ணாதவ னென்றதாயிற்று. சார்வாக, பௌத்த, க்ஷபணக, வைசேஷிக, ஸாங்க்ய, பாசுபதங்களென்னுமிவை அறுசமயங்களெனப்படும். அறுசமயச் செடியதனையடியறுத்தான் வாழியே என்றதுங்காண்க. "உருவாகிய" என்ற விசேஷணத்தின் கருத்தாவது=ஒரு மதமென்று சொல்லக் கூடிய நிலையில்லாதிருக்கச் செய்தேயும் மேலெழுந்த பார்வையில் ஒரு மதம் போலே தோன்ற நிற்கிறவென்பதாம். இங்கு ஈட்டு ஸ்ரீஸீக்கி=ஆபாதப்ரதீதியில் ஒன்றுபோலேயிருக்க, சிலவற்றைவிதிப்பது சிலவற்றை நிஷேதிப்பது, நிஷித்தபரி ஹாரத்தைச் சொல்லுவதாய்க் கொண்டு உபதேசிப்பாரும் கேட்பாருமாய்ப் போருகிற பஹய மையங்களெல்லாவற்றாலும்" என்று. பொருவாகிநின்றான்=பொருவென்று தடைக்குப் பெயர்: அவற்றுக்கு ப்ரதி படனென்றபடி. அவற்றல் தனக்கு ஒரு ஹானியும் நேரப்பெறாதவனென்கை அருவாகிய–ரூபியான பொருளை உருவென்றும் அரூபியான பொருளை அருவென்றும் சொல்லக்கடவது, கண்ணுக்குப் புலப்படாததுவே அருவெனப்படும். தேஹம் புலப்படும் பொருளாய், ஆத்மா புலப்படாத பொருளாயிருக்கையாலே அருவென்று ஆத்மாவைச் சொன்னதாக முடிந்தது. ஸகலபதார்த்தங்களுக்கும் அந்தராத்மாவா யிருப்பவனென்றதாயிற்று. இங்கு ஆதியை என்றது–உள்ளேயிருந்து நியாமகனாயிருப்பதனாலான முதன்மையைப் பற்றவென்க. கருவாகிய–கருவென்று கர்ப்பம். காரணபூதனென்றபடி, காரணத்வத்தைச் சொன்னவுடனே கண்ணனை யென்கையாலே, இப்படி தான் ஸர்வகாரணபூதனாயிருக்கச் செய்தேயும் கார்யவஸ்துக்களிலே யொன்றுக்குத் தான் கார்யபூதனாயிருப்பவனென்கிற ஆச்சரியம் காட்டப்பட்டதாகும். இது அவனுடைய ஸங்கல்ப விசேஷப்ரயுக்தம். ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைக் கண்டு கொண்டேன். ஆழ்வார் க்ருஷ்ணாவதாரத்திற்குப் பிற்பட்டவராயிருக்க "கண்ணனைக் கண்டு கொண்டேனே" என்னக்கூடுமோ வென்கிற சங்கைக்கு நம்பிள்ளை பரிஹாரமருளிச் செய்கிறார் காண்மின்= "ப்ரேமார்த்ர சித்தர்க்கு என்றுங் காணலாம்; அவதாரஸமகாலத்திலும் காணவொண்ணாது சிசுபாலாதிகளுக்கு"

English Translation

I have seen my Krishna Lord, -he stands beyond the six schools. The subtle cause of all the world, he is the womb of even the gods!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்