விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரியாய அம்மானை*  அமரர் பிரானை* 
    பெரியானை*  பிரமனை முன்படைத்தானை*
    வரிவாள் அரவின்அணைப்*  பள்ளிகொள்கின்ற* 
    கரியான்கழல் காணக்*  கருதும் கருத்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் பிரமனை படைத்தானை – முன்னம் நான்முகளை (உந்திக்கமலத்தில்) தோற்றுவித்தவனாய்
வரிவாள் அரவு இன் அணை பள்ளி கொள்கின்ற – அழகிய ஆதிசேக்ஷனாகிற பரமபோக்ய சயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்பவனான
கரியான் – கரிய பிரானுடைய
சுழல் காண – திருவடிகளைக் காண்பதற்கு
கருத்து கருதும் – என்னுள்ளம் கருதா நின்றது.

விளக்க உரை

ஆழ்வார்தாம் தம்முடைய கலக்கத்தைக் கீழ்ப்பாட்டில் வெளியிட்டவாறே எம்பெருமான் ஆழ்வீர்! நாம் சிலர்க்கு அருமைப்பட்டிருக்கிறோமென்பது கிடக்கட்டும் ; கத்துடையடியவர்க்கு எளிவன் என்பதை நீர் ஆதியிலேயே அறிந்து பேசினவரல்லீரோ? நான் பிறர்க்கு அரியனாயிருப்பது கொண்டு உமக்கென்ன வருத்தம்? உமக்கு எளியனே காணும் உமக்கு வேண்டுவதென்ன? அதைச்சொல்லும் என்றருளிச்செய்ய காண்கைதான் வேணுமென்கிறார். அரியாய–ஹரியாய என்றபடி. •••• ஹரிர் ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: என்கிறபடியே நினைத்த வளவிலே ஸகல பாபங்களையும் உரிக்கவல்லவைன. அன்றியே, நாஹரியாய்த் தோன்றிச்சுறுக்கனுக்கு அருள் செய்தவனை அமரர் பிரானை–நித்யஸுரிகளுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்து அநுபவிப்பிக்கும் உகாரகன். பெரியானை–அந்த நித்யஸுரிகளுக்கு மெல்லைகாணவொண்ணாத பெருமை படைத்தவன். பிரமனை முன் படைத்தானை–நித்யவிபூதிநாதனாயிருக்கச் செய்தேயும் லீலாவிபூதிக்கும் மவிதைவிதைத்தவன். வரிவாளரவினணைப் பள்ளி கொள்கிநன்.லீலா வீபூதியைப் படைத்தது. மாத்திரமன்றிக்கே தத்ரக்ஷணத்திலும் தீக்ஷிதனாய் அரவணைமேல் உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானாயிருப்பவன் கரியான்– ••• ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: நாகபர்யங்கமுத்ளருஜ்ய ஹயாகதோ மதுராம் பரீம் என்கிறபடியே அவ்வரவணையை விட்டு வடமதுரையிலே வந்து கண்ணனென்னுங் கருந்தெய்வமாய்ப் பிறந்தவன் அன்றியே, வெளுத்த நிறத்தையுடைய திருவனந்தாழ்வான் மேலே ஒரு காளமேகம் அன்றியே, வெளுத்த நிறத்தையுடைய திருவனந்தாழ்வான் மேலே ஒரு காளமேகம் அன்றியே, வெளுத்த நிறத்தையுடைய திருவனந்தாழ்வான் மேலே ஒரு காளமேகம் சாய்ந்தாற்போன்று பரபாகசோபை விளங்கக் கண்வளர்ந்தருளுமவன் என்னவுமாம் ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய கழலைக் காணக்கருதுங் கருத்தே. படுக்கைக்குப் பாபாகமான வடிவையும், வடிவுக்குப் பாபாகமான திருவடிகளையும் காண்கையிலுண்டான விருப்பத்தை வெளியிட்டாராற்று.

English Translation

The Lord of gods came as a lion. He made Brahma too. He reclines on a hooded serpent, My heart seeks his feet

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்