விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறுவது இதுஎன்று*  உனக்கு ஆள்பட்டு*  நின்கண் 
    பெறுவது எதுகொல்என்று*  பேதையேன் நெஞ்சம்*
    மறுகல்செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்* 
    அறிவதுஅரிய*  அரியாய அம்மானே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானவர் தானவர்க்கு – அதுஉலர்க்கும் பிரதி கூலர்க்கும் வாசியற
என்றும் அறிவது அரிய – எப்போதும் அறிய வொண்ணாத
அரிய ஆய அம்மானே – நரஸிம்ஹ மூர்த்தியே
இனி உறுவது என்று – 'இதுதான் ஸ்வரூபா நுரூபம்' என்றறுதி யிட்டு
உனக்கு ஆள்பட்டு – உனக்கு சேஷ பூதனாகி

விளக்க உரை

தமக்குண்டான வொரு கலக்கத்தை விண்ணப்பஞ் செய்கிறார். 'எம்பெருமானுக்கு ஆட்படுவது தான் ஸ்வரூபா நுரூபம்' என்று துணிந்து அவனுக்கு ஆட்பட்ட பின்வு கலங்குவதற்கு நியாயமில்லை; அப்பெருமான் நமக்குநன்மையே செய்தருள்வான்; என்கிற துணிவோ, அல்லது 'அவன் நமக்கு எது செய்தாலும் அது நமக்கு ப்ராப்யமே' என்கிற துணிவோ, இரண்டத்தொன்று இருந்து தீரவேண்டும் செய்த்தலை யெழு நாற்றுப்போல் அவன் செய்வன செய்து கொள்ள என்று துணிந்து கவலையற்றிருக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க, அந்தத்துணிவு நமக்கு உண்டாகாமல் 'நித்ய கைங்கர்யம் நேருமோ? அல்லது ஸம்ஸாரத்தில் இன்னமும் கிடந்துழல்வதேயாகுமோ?' என்கிற கலக்கமே உண்டாகியிருப்பதாக விண்ணப்பஞ் செய்கிறார். உறுவது இதுவென்று–மேலே 'ஆட்பட்டு' என்றிருக்கையாலே இதுவென்பதற்குப் பொருள் ஆட்படுகையேயாம். 'உண்டியே உடையே உகந்தோடுவது நமக்கு உற்றதன்று; எம்பிரானுக்கு ஆட்படுகைதான் உற்றதாகும்' என்று கொண்டு=என்றபடி,. உனக்கு ஆட்பட்டு–அவ்வுறுதி கொண்டவளவோடு நில்லாமல் அவ்வுறுதியை அநுஷ்டான பர்யந்தமாக்கி யென்றபடி. விழிக்குங்கண்ணிலேன் நின்கண்மற்றல்லால் வேறொருவரோ டென்மனம் பற்றாது என்றும், உனக்குப்பணி செய்திருக்குந் தவமுடையேன் இனிப்போயொருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்சாயை யழிவுகண்டாய் என்றும், எற்றைக்கும் மேழேழ்பிறவிக்கு முன்றன்னோடுற்றோமேயாவோம் உனக்கே நாமாட் செய்வோம் என்றும் கொண்டிருந்து என்றபடி. இப்போது இதுசொல்லுகிறது எதற்காக வென்னில் ; "நின்கண்பெறுவ தெதுகொலென்று பேதையேன்னெஞ்சம் மறுகல்செய்யும்" என்று மேலே சொல்லப்படுகிற விஷயம் இவ்வுறுதிக்குத் தகுந்ததாக இல்லையே! என்பதற்காகச் சொல்லுகிறது. இவ்வுறுதி எனக்கு உண்டாகாமலிருந்தால் நான் கவலைப்படலாம் ; இவ்வுறுதியைப் பெற்றுவைத்தும் நான்கலைப்படுறிது தகுதியன்றோ; தகாதது நேர்ந்திருக்கிறதே ! என்று கிலேசிக்கிறார். நிண்கண் பெறுவது எதுகொல் என்று – செய்கிறோம் செய்கிறோமென்று தலைதுலுக்கிக் கொண்டிருந்து இன்னமும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறக்க வைக்கிறாயோ அல்லது என்னாற்றாமையையறிந்து விரைந்து வந்து முகங்காட்டுகிறாயோவென்று நெஞ்சு தளும்பா நின்றதாம்.

English Translation

Lord confounding the gods and Asuras, you came as Narasimhal Fittingly I have surrendered myself, but fear for what lies ahead

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்