விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீலம்எல்லைஇலான்*  அடிமேல்*  அணி 
    கோலம்நீள்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்
    மாலைஆயிரத்துள்*  இவை பத்தினின் 
    பாலர்*  வைகுந்தம்ஏறுதல் பான்மையே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அணி கோலம் நீள் கருகூர் சடகோபன்– மிகவழகிய திருக்குருசடரியைதரித்த ஆழ்வாருடைய
சொல் மாலை – சொற்களினாலான மாலையநயிருக்கிற
ஆயிரத்துள் – ஆயிரத்தினுள்ளே
இவை பத்தினின் – இப்பதிகத்திலே அந்வயித்தவர்கள் பாலர்
வைகுந்தம் ஏறுதல் பான்மை – பரமபதத்தில் ஏறப்பெறுவது இயல்லாம்

விளக்க உரை

இப்பதிகம் கற்பார் திருநாடு செல்லுகை ஆச்சரியமன்று, ப்ராப்தமே என்கிறார். இத்திருவாய் மொழியால் பேசப்பட்டது எம்பெருமானுடைய சீலாதிக்ய மாதலால் சீலமெல்லையிலானடிமேல் என்கிறார். – ••• மஹதோமந்தைஸ் ஸஹ சீரந்த்ரேண ஸம்த்லேஷ: சீலம் என்று சொல்லுவர்களாகிலும், நெஞ்சையருக்கும் படியான குணங்களெல்லாவற்றிற்கும் சீலமென்பது பொதுப் பெயருமாகும். அது வல்லை கடந்து விளங்குபவனான எம்பெருமானது திருவடிகளைப் பற்றிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இப்பதிகத்தின் அருகேயுள்ளவர்கள் (அதாவது) இப்பதிகத்தோடு ஏதேனுமொருபடியாக ஸம்பந்தம் பெறுமவர்கள், உரிய காலத்திலே பரமபதம் சென்று சேர ப்ராப்தம். இப்பாசுரங்களைக் கண்டபாடமாக்கிகச் சொல்லுவதோ, அர்த்தாநுஸந்த்ரணம் பண்ணுவதோ, பிறர் அநுஸந்திக்கக் கேட்டிருப்பதோ, திருவாய்மொழி ஸேவிக்குமிடத்தில் இருந்து உறங்குவதோ இப்படிப்பட்டவற்றில் ஏதேனுமொன்றைச் செய்யுமவர்களும் இளை பத்தினின் பாலர் என்றதற்குப் பொருளாவரென்க. "வைகுந்த மேறுதல் பான்மையே" என்ற சப்தஸ்வாரஸ்யத்தில் கிடைத்த பொருளை நம்பிள்ளை விவரிக்குமழகு காண்மின்– "பித்ருதனம், புத்ரனக்கு தாய்ப்ராப்தமாயிருக்கிறே" என்று.

English Translation

This decad of the thousand songs by fair kurugur's Satakopan on the Lord of great virtues will secure high Vaikunta

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்