விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடைவதும்அணியார்*  மலர்மங்கைதோள்* 
    மிடைவதும்*  அசுரர்க்குவெம்போர்களே*
    கடைவதும்*  கடலுள்அமுதம்*  என்மனம் 
    உடைவதும்*  அவற்கேஒருங்காகவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடைவதும் – ஸம்க்லேஷிப்பதும்
அசுரர்க்கு வெம்போர்களே – ஆஸுரப்ரக்ருதிகளோடு வெவ்விய போர்களை செய்வதே நெஞ்சினால் நினைப்பதும்
கடல் அமுதம் – கடலிலுள்ள அமுதத்தையே கடைந்து கொடுப்பதும்
அவற்கே – அப்பெருமானுக்கே
எம் மனம் ஒருங்காகவே உடைவதும் – என்னெஞ்ச ஒருபடிப்பட சிதிலமாவதும்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் தம் திருவுள்ளத்தை வேண்டினாரே; வேண்டுகோள் பலித்து அது நினைந்து நைந்து உள் கரைந்துருகுகிறபடியைப் பேசுகிறாரிதில். அடைவதும் மிடைவதும் கடைவதுமென்று ஆழ்வார் சொல்லுகிறவையல்ல; இவற்றைத் தம்திருவுள்ளம் சிந்திக்கிறப்படியைத் தாம் ஒரு காணமாக நின்று சொல்லுகிறாராயிற்று. எம்பெருமான் பெரிய பிராட்டியாரது திருத்தோளோடே ஸம்ச்லேஷிக்கிறபடியை நினைந்து உடைகின்றதாம் நெஞ்சு; அவன் ஆச்ரிதவிரோதிகளான அசுரர்களைப் போர்க்களத்தில் முடித்து •••• = தம் த்ருஷ்ட்லா சத்ருஹந்தாரம் மஉறர்ஷீணும் ஸீகாவலும், பபூவ ஹருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே என்ன நின்ற ஸந்நிவேசத்தைத் திருவுள்ளம் சிந்தித்து உடைகின்றதாம். ப்ரயோஜநாந்தா பரர்களான தேவர்களுக்கும் உடம்பு நோவக் கடல்கடைந்து அமுதமளித்த ஆற்றலைச் சிந்தித்து உடைகின்றதாம் நெஞ்சு. இப்பாட்டில் நான்கு அடிகளும் தனித்தனி நான்கு வாக்கியங்கள் போல் தோன்ற நின்றாலும் பாட்டு முழுவதும் ஒரே வாக்கியமாகவே கொள்ளத்தகும். அணியார் மலர்மங்கை தோளடைவது பற்றியும்,. அசுரர்க்கு வெம்போர்கள் மிடைவது பற்றியும், கடலுளமுதம் கடைவது பற்றியும் அவற்கேயொருங்காக என்மனமுடைவது என்று ஏகவாக்யமாகத் தாற்பரியங்கொள்ளக்கடவது. "கடைவதும் கடலுளமுதம்" என்ற மூன்றாமடிக்கு நம்பிள்ளையீடு இன்சுவை மிக்கது. அவ்விடத்து ஸ்ரீஸூக்திகள் வருமாறு – அவன் பனிக் கடலைக்கடைய இவர் மனக்கடல் உடையப்புக்கது. விரகராயிருப்பார் கோழைகளாயிருப்பார் பக்கலில் தாவ்யம் வாங்க நினைத்தால், முந்துறமிடுக்கராயிருப்பாரை நெருக்கிலாங்கவே இவர்கள் தாங்களே கொடு சென்று கொடுப்பர்களிறே; (அது போல) அவனும் மஹத்தத்வமான கடலை உலக்கைவிடு நகமிட்டு நெருங்கி அதன் நல்லுயிரை வாங்க இவருடைய திருவுள்ளமுடையத் தொடங்கிற்று என்று. இத்தால், ஆழ்வார்திருவுள்ள முருகுவதற்காகவே எம்பெருமான் கடல்கடைந்தனென்றதாயிற்று.

English Translation

Joy is the lotus-dame's embrace, hard is the constant war with Asura. Churning is the Ocean's ambrosia. Breaking is my hart united with him

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்