விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்*  இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி* 
    தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்*  தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*
    திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!*  திருவைகுந்தத்துள்ளாய்! தேவா* 
    இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்*  இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எங்கள் எண் முகப்பே – எங்கள் கண் முன்னே
உலகர்கள் எல்லாம் – லோகத்திலுள்ளாரெல்லாரும்
அடி இணை – திருவடியினையை
தொழுதுஎழுது இறைஞ்சி – தொழுவது மெழுவதுமாயிருந்து வணங்கி
தங்கள் அன்பு ஆர – தங்களுடைய பக்தி வளர

 

விளக்க உரை

தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் பூசிக்கையாவது–நூறு பிராயம் புகுவீர், பொன்னாலே பூணூநூலிடுவீர் என்றாப்போலே சொல்லுகை. இவ்விடத்து ஈட்டில் "வங்கிப் புரத்து நம்பி விஜயஸ்வ என்ன, ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைப்பது" என்றுள்ளது. அவ்வைதிஹயமாவதென்னென்னில், வங்கிப்புரத்து நம்பி பெருமாளை ஸேவிக்க எழுந்தருளின வளவிலே ஒரு பக்கத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களும் மற்றொரு பக்கத்தில் ஆய்ச்சிகளும் நின்று கொண்டு பெருமாளை ஸேவித்திருந்தார்களாம்; வங்கிப்புரத்து நம்பி ஸ்ரீவைஷ்ணவர்கள் நிற்கிற பக்கமாக நில்லாமே ஆய்ச்சிகள் நிற்கிற பக்கமாக நின்றராம். அதை முதலியாண்டான் கண்டு இதென்ன? ஸ்ரீவைஷ்ணவர் திரளிலே சேராமல் ஆய்ச்சிகள் பக்கமாக நிற்கிறதேன்? என்று கேட்டாராம். அதற்கு நம்பி சொன்னாராம் எப்படியும் நாம் பலவகை யபிமானங்கொண்டு அஹங்காரமமாகாரயுக்தர் களாயிருப்போம், நம்மேல் பகவத்கடாக்ஷம் பாய்வது மேட்டு மடையாகவேயிருக்கும்; அவர்கள் உண்மையில் தாழ்சசி யுடையவர்களாயும் தாழ்ச்சி தோற்றப் பேசுமவர்களாயும் இருப்பவர்களாகையாலே அவர்கள்மேல் பகவத் கடாக்ஷம் பாய்வது பள்ள மடையாயிருக்குமென்று அவர்கள் பக்கமாகக் நின்றேன். என்று. ஆனாலும் எம்பெருமானை நோக்கி ஆய்ச்சிகள் போற்றும்படியையும் நம்பி போற்றும் படியையும் ஆண்டான் கண்டவராகையாலே இந்த வாசியையெடுத்துக் காட்ட வேமென்று திருவுள்ளம் பற்றி நம்பியை நோக்கி கேட்டராம்–'ஆய்ச்சிகள் சொன்னதென? தேவரீர் அருளிச் செய்ததென்?' என்று "பொன்னாலே பூணூநூலிடுவீர், நூறுபிராயம் புகுவீர், அழுத்தவிரட்டையெடுப்பீர் என்று ஆய்ய்சசிகள் சொன்னது; விஜயஸ்வ, விஜயீபவ இத்யாதிகள் அடியேன் சொன்ன வார்த்தை" என்று நம்பி சொல்ல, அதற்கு ஆண்டான் "அங்குப்போயும் முரட்டு ஸம்ஸ்க்ருதம் விட்டீரில்லையே; எங்கேயிருந்தாலும் நாம் நாமே; இங்கே யெழுந்தருளீர்" என்றருளிச் செய்தாராம். இதுதான் தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் பூசிப்பது. அது தன்னிலும் தலைத்தலைச் சிறந்து பூசிப்பதாவது–ஒருவர்க்கொருவர் மேல்விழுந்து மிகவும் ஆச்ரயித்துக் கொண்டாடுவது. இப்படிப்பட்ட ஸந்நிவேசங்களை யெல்லாம் ஆழ்வார் காண விரும்புகிறபடி, திங்கள்சேர் மாடத்திருப்புளிங்குடியாய்–சந்திரமண்டலத் தளவும் ஒங்கியிராநின்ற மாடங்களையுடைய திருப்புளிங்குயென்கிறவிது பொய்யுரையல்லவா? *பொய்யில் பாடலாயிரத்தில் இங்ஙனே பொய்புரை புகலாமா? என்று சிலர் சங்கிக்கக் கூடும்; கேண்மின்; அலங்கார சாஸ்த்ரத்தில் அதிசயோக்தியென்பதோர் அலங்காரமுண்டு. (தமிழர் உயர்வு நவிற்சியணி என்பர்) அதனை அப்ராப்த விஷயங்களில் உபயோகிப்பர் ஸாமாந்யசுவிகள் ஆழ்வார் போல்வார் ப்ராப்த விஷயமான பகவத் விஷயத்திலே உபயோகிப்பர்கள். அவர்களுடைய திருக்கண்களுக்கு அங்ஙனே காட்சி தந்தபடி. உயரலோங்கின மாடங்களுண்டாக வேணுமென்கிற ஆசம்ஸையினால் அருளிச் செய்கிற படியுமாகலாம். *அந்யத்ர அதத்குணோக்திர் பகவதி ந* என்று பட்டரருளிச் செய்கையாலே பகவத் விஷயத்தில் பொய்யுரை யென்பதற்கு ப்ரஸக்தியில்லை யென்க. திருவைகுந்தத்துள்ளாய் = புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று என்ற பாசுரத்தில் பேசப்பட்ட ஸ்ரீவைகுண்டமென்கிற அணித்தான திவ்ய தேசத்தைச் சொல்லுகிறபடி.

English Translation

O Lord of moon-touching-mansions-Tiruppulingudi!, Lord of Srivaikundam! May the whole world rise and worship your feet, vying with one another, to praise with all the love in their hearts and power in their speech! Come before our eyes one day, choose a niche and sit with us

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்